Saturday 8 December 2012

திருநீற்று பச்சிலை

OCIMUM BASILICUM
(Thiruneetrupachai) (N.O. Labiatae)

Habit: Shrub or herb Parts

used: Whole plant Constituents: Leaves contain an essential oil,
which contains new trepan. Action: Diaphoretic, Carminative, and
Stimulant. Seeds are Mucilaginous, Demulcent, Aphrodisiac and
Diuretic. Leaves are Fragrant and Aromatic. Juice of the plant is
Anthelmintic. Root is Febrifuge.

Uses: Flowers of this aromatic herb is white in color with Fragrant
smell. Juice of the leaves cures ringworm infection and other skin
Diseases. Leaf juice if rubbed reduces the pain in scorpion sting.
Leaf juice if taken along with lukewarm water cures vomiting. The
mixture of its leaves and sweet flag are ground and if applied
reduces the pimples. Juice of the leaves if taken relieves labor pain
and pain during Parturition. This also cures phlegmatic disorders and
vomiting. Juice of the leaves mixed with cow's milk if taken twice
daily for Seven days, cures venereal diseases. Seeds and flowers are
used as stimulant, diuretic and demulcent. Seeds If taken after
childbirth, removes the pain. Seed indecoction cures urinary
Diseases. Leaves are powdered and used as a snuff to eradicate the
maggots from the nose. This also cures drowsiness. Seeds are used to
cure piles and constipation. Sherbet made out of its seeds cures
dysentery, gleet and cough. Decoction of the leaves if irrigated to
the nose acts as parasitiside but produces anesthesia.



நறுமணம் தரும் சுகமான மூலிகை. ஜலதோஷம் ,மூக்கடைப்பு.சுவாசக் கோளாறு ஆகியவற்றுக்கு இலைகளை நுகர்ந்து பார்த்தால் சுகம் தரும்

மூலிகைகளின் அரசன் என்று அழைக்கப்படும் திருநீற்றுப்பச்சிலை தாவரம் துளசியைப் போல தெய்வீக தாவரம் என்று அழைக்கப்படுகிறத. இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் உள்ள நோய்களைப் போக்கும் அருமருந்தாக பயன்படுகின்றன.

உருத்திரட்சடை இதற்கு திருநீற்றுப் பச்சிலை, பச்சை சப்ஜா என வேறு பெயர்களும் உண்டு.

மணம் மிக்க தாவரமான திருநீற்றுப்பச்சிலையின் முழுத் தாவரமும் மருத்துவ குணம் கொண்டது. சாதாரணமாக சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இந்த மூலிகைக் தாவரம், வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும் ஜுரத்தை குறைக்கும் கிருமி நாசினியாகும்.

இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது. இது இந்தியா முழுவதும் காணப்படும் ஒருவகை செடியினமாகும். திருநீற்றுப் பச்சை சிலேஷ்சர்த்தி தன்னை
விரிநீற்றைப் போலாக்கு மெய்யே பெரிய சுரத்திரத்த வாந்தி சரமருசி நில்லா வுருத்திரச்ச டைக்கே யுரை---இது அகத்தியர் குணபாடம் இதன் இலை கற்பூரத்தின் தன்மை கொண்டது. 
வியர்வையை பெருக்கச் செய்யும். இலைச்சாறு வாந்தி சுரம் ஆகியவற்றைப் போக்கும்.

விதை
கர்ப்பிணிப் பெண்களுக்கு இதன் விதையை தக்க முறைப்படி மருந்து செய்து கொடுக்க தாய்க்கு நல்லது.

வேர் 
வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க வல்லது. இதன் வேரை இடித்து பொடித்து கஷாயம் செய்து காலை மாலை அருந்திவந்தால் வயிற்றில் பூச்சிகளை அழித்து வயிற்றுப் புண்களை ஆற்றும். சிறுநீர் பெருக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும் சிறுநீரகத்தை பலப்படுத்தி சிறுநீரை பெருக்கும். இதனால் உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது.
முகப்பரு உள்ளவர்கள் திருநீற்றுப் பச்சிலையை கசக்கி சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு நீங்கும்.

இதன் இலைச்சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டு வந்தால் காதுவலி, சீழ்பிடித்தல் நீங்கும்.

திருநீற்றுப் பச்சிலையின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து மூக்கில் உறிஞ்சுவதால் மூக்கில் உள்ள கிருமிகள் வெளியேறும்.
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து இரவில் கட்டியில் போட்டு வர கட்டிகள் உடையும்.

இலையை நுகர்ந்து தலையணை அடியில் வைத்துப் படுத்தால் தலைவலி போய், நன்கு தூக்கம் வரும்.

இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து பருகிவர, மார்புச்சளி, இருமல், மேல் சுவாசம், வயிற்று வாய்வுப் பிரச்னைகள் தீரும்.
இலையை வாட்டிப் பிழிந்து காதில் விட, காது நோய், காது மந்தம் தீரும்.
தாது உப்புக்களும், உயிர்சத்துக்களும்

திருநீற்றுப்பச்சிலையில் பீட்டாகரோட்டீன் மற்றும் ஏ உயிர்ச்சத்தும் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளை கொண்டுள்ள இந்த மூலிகையில் பொட்டாசியம், மாங்கனீசியம், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் காணப்படுகின்றன. இது ஆண்டிஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் கிருமிகளை கொல்கிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

இருமல் மருந்தாகும் இலைகள்

இதன் இலைகள் மணம் மிக்கவை. கக்குவான் இருமலுக்குப் பயன்படும். சாற்றினை மூக்கினுள் தாரையாக செலுத்தும் போது இருமல் கட்டுப்படுகிறது. தேனுடன் கலந்து சூடக்கப்பட்ட சாறு சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும். இது படர்தாமரையை குணப்படுத்தும்.

நஞ்சுக்கு மாற்று மருந்து

அஜீரணத்தைப் போக்கும். பிசுபிசுப்பு தன்மையுடைய இதன் இலைகள் சிறுநீர்ப்பை அலற்சி, மலச்சிக்கல், உள்மூலம், சிறுநீரகக் கோளாறு, மேகவெட்டை, கோனேரியா போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலையின் சாறானது வயிற்றுப்போக்கு, வலி, புண்கள், போன்றவற்றிர்குப் பயன்படும். பற்றுப்புண்கள், காயங்களுக்கு தடவ அவை எளிதில் குணமடையும்.

அஜீரணம் போக்கும் 
சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம்.

இந்த தாவரத்தின் மலரானது அஜீரணத்தைப் போக்கும் மூத்திரக் கடுப்பை நீக்கும் வேரானது காய்ச்சலைத் தணிக்கும். குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும்.

விஷப்பரு குணமடையும்

முகத்தில் தோன்றும் விஷத் தன்மை வாய்ந்த பருக்களுக்கு திருநீற்றுப்பச்சிலை அருமருந்து. திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு வைத்து அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேலை தடவி வரை பரு காய்ந்து கொட்டிவிடும். தோல் மென்மையடையும்.
இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து பருகிவர, மார்புச்சளி, இருமல், மேல் சுவாசம், வயிற்று வாய்வுப் பிரச்னைகள் தீரும்.
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து இரவில் கட்டியில் போட்டு வர கட்டிகள் உடையும்.

1 comment: