Saturday, 8 December 2012

வில்வம் பழம்

சிவன் கோவில்களில் பெரும்பாலும் காணப்படும்  வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம்.

வில்வம் பழம்


 வில்வ பழத்தில் பல சத்துக்கள் உள்ளன. அவை புரதச்சத்து, தாதுப்பொருள் சத்து, மாவுப்பொருள் சத்து, சுண்ணாம்பு சத்து, கொழுப்புச் சத்துக்கள் உண்டு. மேலும் வைட்டமின் ஈ சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் உள்ளன.

வில்வ பழத்தின் பயன்கள்: வில்வ பழத்திலிருந்து ஜாம், ஸ்குவாஷ், சர்பத், சிரப் ஆகியவைகளை தயாரிக்கலாம். கற்கண்டு, மிட்டாய் மற்றும் மிட்டாய்பானங்கள் தயாரிக்கலாம். இதன் குழம்பு வண்ணப் பொடிகளுடன் கலந்து படங்கள் வரைய பயன்படுகிறது. இதன் பழச்சதையை சோப்பு போலும் பயன்படுத்தலாம். பழத்தின் ஓட்டிலிருந்து ஒரு வகையான தைலம் தயாரிக்கலாம். இது வில்வ தைலம் எனப்படுகிறது.


இதன் விதைகளிலிருந்து வில்வ எண்ணெய் தயாரிக்கலாம். இதன் மரப்பட்டையிலிருந்து காகிதம் தயாரிக்கலாம். வில்வ பழத்தை சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். வில்வ பழச்சதைகள் தண்ணீரில் போட்டு சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இதனை ஜுஸ் செய்தும் சாப்பிடலாம்
.
வில்வ இலைகளிலிருந்து சாறு பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து சாப்பிட்டால் ஜலதோஷம், காய்ச்சல் நீங்கும். மேலும் வில்வ இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அதனை காய்ச்சி, வடிகட்டி தினந்தோறும் அரை டம்ளர் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மலச்சிக்கல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இதன் பழச்சதையை எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றோட்டம், வயிற்று கடுப்பு குணமாகும். இதன் சதையுடன் பசும்பால் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தல் கண் எரிச்சல், தலைச்சூடு தணிந்துவிடும். இதன் இலைகளை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், தலைவலி ஆகியவை நீங்கிவிடும். வில்வப் பழம் குடலுக்கு வலிமையை கொடுக்கும். ஜீரணம் ஆகிவிடும். இவை அனைத்தும் உள்ள இந்த மரத்தை நாம் வீடுகளில் வளர்த்து பயன்பெறலாம்.

நுரையீரல்தொடர்பாக ஏற்படும் நோய்களை வில்வம் குணப்படுத்துகிறது.  சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், மூச்சுவிட இயலாத தன்மை (ஆஸ்துமா) போன்றவற்றிற்கு வில்வம் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து இலைகளை மென்று உட்கொள்ள வேண்டும்.

இதயத்தைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துகிறது.  மனித உடலிலுள்ள ரத்தத்தைத் தூய்மை செய்கிறது. சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.  வயிற்றிலே  தோன்றும் அஜீரணக் கோளாறுகளை அகற்றுகிறது.  வாயுத் தொல்லையை விரைவில் அகற்றும் தன்மையை உடையது.  வில்வ இலைகளை மசிய அரைத்து,  மோருடன் கலந்து பருக வேண்டும்.

நூறு ஆண்டுகள் ஆன வில்வ மரத்தின் இலைகள் குஷ்டத்தைக் குணப்படுத்துகின்றன. தினமும் வெறும் வயிற்றில் கைப்பிடியளவு வில்வ இலைகளை 1 மண்டலம் (48 நாட்கள்)  தொடர்ந்து உட்கொண்டால் குஷ்டம் குணமாகும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

வில்வ வேரை 10 - 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர, தேவையில்லாத விந்து வெளியேற்றத்தைத் தடுத்து, விந்துவைப் பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும்
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத் திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரைமட்டும் அருந்தி னால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், வாத தோஷம் போகும்

அதிக அளவு புரதம் அதன் கனியில் உள்ளது .அதிகஅளவு சீத பேதி மட்டும் மல கழிவுக்கு வில்வகனி சிறந்த நிவாரிணி .

பாதி கனிந்த பழத்தை சதையை  நல்லெண்ணையில் ஒரு வாரம் ஊறவைத்து குளிக்கும் போது உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சரும நோய்,மற்றும் உடம்பு எரிதல் குணமாகும் .

சோகை நோய்க்கு அதன் காயை சதைபத்தை எடுத்து காயவைத்து அதை போடி செய்து , 10 கிராம் பொடிக்கு  50  கிராம் பசும் நே சேர்த்து நாள் ஒன்றிக்கு இருமறை ஒரு மண்டலம் உபயோகிக்க குணமாகும் .

ரத்த அழு த்தத்திர்க்கு இலையை சாறுபிழிந்து உபயோகிக்க குறையும் . வில்வ இலை காற்றை சுத்தமாக்கும் . வில்வம் பழத்தை தொடர்ந்து உபயோகிக்க சக்கரை வியாதி குணமாகும்

No comments:

Post a Comment