Thursday, 13 December 2012

சாயா புருஷ தரிசனம் உட்கருத்து



சாயா புருஷ தரிசனம் என்பது குறித்து அன்பர்கள் சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிரேன்.காலை ஏழு மணி அளவில் சூரியனுக்கு எதிர் திசையில் அதாவது மேற்கு பார்த்து நின்றால் நமது நிழல் தரையில் நீண்டு காணப படும். அதனை சுமார் இரண்டு நிமிடங்கள் இமைக்காது பார்த்துவிட்டு பின்னர் விண்ணை நோக்கிப் பார்வையை செலுத்தினால் விண்வெளியில் நமது நிழல் தெரியும் . தொடர்ந்து இப் பயிற்சியை தினசரி  செய்து வந்தால் அதன் பயன்பாடு குறித்து ஒரு பட்டியலே சொல்லப்பட்டிருக்கிறது.

இப்பொருள் குறித்து எனது கருத்து
.விண்வெளியில் நமது நிழலை பார்த்தால் பயன் கிடைக்கிறதோ என்னவோ அதில் ஒரு பொருள் புதைந்துள்ளது எனக் கருதுகிறேன்.வெட்ட வெளி சித்தர் என்பவரைப் பற்றி நன் எங்கோ படித்த ஞாபகம்.வெட்ட வெளியினை பார்த்து பார்த்து ஞானம பெற்றதாக அவரை சொல்லுவார்கள்.காலை வேளையில் மேற்கு நோக்கி வெட்ட வெளியிணை கூர்ந்து பார்க்கும்போது பிரபஞ்ச
திவலைத் துளிகள் நுண்ணிய ஒளித்துகள்களாக நம் கண்ணின் முன் வந்து குவியும். அதை cosmic energy particles என்று கூட சொல்லலாம். அந்த அண்டத்தின் பேராற்றல் திவளைகளை கிரகிப்பதன் மூலம் நமது பிண்டத்தின் ஜீவ காந்த ஆற்றல வலு அடையும் என்பது சாயா புருஷ தரிசனத்தில் உள்ளடங்கியுள்ளதாக  தோன்றுகிறது.


No comments:

Post a Comment