Saturday, 15 November 2014

#விருமாண்டிச்சாமிகருமாத்தூர்உசிலம்பட்டிமதுரை #VIRUMAANDI

விருமாண்டிச்சாமி
1969--1979 வரை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் என்ற கிராமத்தில் வசித்தேன். நான் சென்னையில் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வந்தாலும் இன்றும் அந்த ஊரில் வசிப்பது போல் நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

Saturday, 11 October 2014

பேரகத்தி பூ

பேரகத்தி பூ ( சீமை அகத்தி)

 இந்த சீமை அகத்தி தமிழ் நாட்டில் தென் மாவட்டத்தில் அதிகமாகஉள்ளது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ளஇடத்தில் நன்கு வளரும். இது ஆற்றுப்படுகைகளில் அதிக உயரமாக வளமுடன் வளரும்.இது ஆறு அடி முதல் 12 அடி வரை வளரக்கூடியது. இது ஒரு புதர் போன்ற சிறு மரம். வெட்ட வெட்டதழைத்து வளரும் இந்தத் தாவரம் பூர்வீகம் மெக்சிகோ நாடு. இதன் இலை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை 50 -80 செ.மீ. நீளம் உடையது.இது அமேசன் மழைக் காடுகளில் அதிகமாகக்காணப்படும் மேலும் பெரு, பிரேசில் , பிரன்சுகயானா, கயானா, வெனிசுலா, கொலம்பியா, ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா,அமரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும். இது அழகுச் செடியாகவும்வளக்கப்படுகிறது. இதன் பூக்கள் மெழுகுவத்தி வைத்தால் போன்றுமஞ்சள் நிறமாக கொத்தாக அழகாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும் வாகை இலைபோன்று. பூக்கள் உதுர்ந்து நீண்ட காய்கள் இருபக்கதுதிலும்அடுக்காகக் காய்க்கும்.இதன் விதைகள்நீள் சதுர வடிவில் அமைந்திருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. 

மருத்துவப்பயன்கள்:

சீமைஅகத்திச் செடியின் இலைகள் அதிகமாக மருத்துவத்திற்குப் பயன்படுகிறது.தோல் வியாதிகளைக் குணப்படுத்துகின்றது. வண்டுகடி, படர்தாமரை, சொறிசிறங்கு, கற்பப்பை கோளாறுகள் பாக்டீரிய்,பூஞ்சல்களைக் கொல்லவும், இரத்த அழுத்தம் குறைவதைக் குணப்படுத்தவும்,வயிற்றுவலி, காய்ச்சல், ஆஸ்த்துமா, அல்சர், பாம்புக்கடி, சிறுநீர் எழிதாகக்கழிய, நுரையீரல் நோய்கள், இரத்த சோகை, மாதவிடாய் சம்பந்தமான நோய்கள், மேலும் மேக நோயான சிபிலிஸ் போன்றவைகளையும் குணப்படுத்தும். இதன் இலையில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு,ஷேம்பு,முகப்பூச்சாகவும் பிலிப்பெயின்சில் பயன்படுத்துகிறார்கள். 
வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைபறித்து எலுமச்சஞ்சாறுடன் சேர்த்து நன்குஅரைத்து வண்டு கடிமீது காலை, மாலைதடவினால் விரைவில் குணமடையும்.
இதன் மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படிகசாயம் வைத்துக் கொடுக்க சிறு நீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.

சீமைஅகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊரவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும். 

படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அறைத்து அதற்கு சமனெடை தேங்காய்எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும்இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும்

Tuesday, 19 August 2014

குருவிக்கூடு வீடியோக்கள்


வீட்டுத்தோட்டம். குருவிக் கூடு  வீடியோ  பகுதி ஒன்று
******


வீட்டுத்தோட்டம். குருவிக் கூடு  வீடியோ  பகுதி இரண்டு
                                                     *********

வீட்டுத்தோட்டம். குருவிக் கூடு  வீடியோ  பகுதி  மூன்று

**********

வீட்டுத்தோட்டம். குருவிக் கூடு  வீடியோ  பகுதி   நான்கு                                                   **********
வீட்டுத்தோட்டம். குருவிக் கூடு  வீடியோ  பகுதி ஐந்து

Saturday, 21 June 2014

#பெயர் #NameReflectsCosmicRecords

பெயர் என்பது உடலுக்கு அல்ல. அது ஆன்மாவுக்கு உரியது.
தாய் தந்தையரே மனிதருக்கு கடவுள். 
அவர்கள் வைத்த பெயரை போற்றுதல் நன்று.
#பிரபஞ்சப்பதிவேட்டில் அவர்கள் வைத்த பெயர்தான் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

#மண்ணாங்கட்டி #ஆலமரத்தான் #மண்டு #சொரிமுத்து #விருமாண்டி #காக்குவீரன் இவையெல்லாம் புனித பெயர்களே 

Thursday, 19 June 2014

சிரிப்பு

சிரிப்பது எனக்கு ரெம்ப பிடிக்கும்.நண்பர்களுடன் சேர்ந்து சிரிப்பது மறக்க முடியாத ஒன்று.ஆனாலும் மனசுக்குள் ஒரு பயம் இருக்கும்.சிரிக்கும்போது அவ்வளவாக சத்தம் வராது.அது நமட்டு சிரிப்பில் ஆரம்பிக்கும்.என்னுடன் சேர்ந்து சிரிப்பவரைப்பார்க்கும்போது சிரிப்பு மேலும் அதிகரிக்கும்.உடல் வயிறு,முதுகு எல்லாம் குலுங்கும்.விலாவில் பிடித்துக்கொள்ளும். சிலசமயம் சிரித்து சிரித்து உயிர் போய்விடுமோ என்று பயமாக இருக்கும்..சிரிப்பு நின்ற பிறகும் கொஞ்ச நேரம் முதுகு வலிக்கும்.

Monday, 16 June 2014

சாவு

சாவதற்குள் ஒருமுறை திருமந்திரம் படித்துவிட்டு சாகுங்கள். புரியாத பாடல்களை விட்டுவிடுங்கள் .உங்களுக்கான பாடல் உங்களுக்கு புரியும்

Friday, 2 May 2014

அன்பே சிவம்

அன்பே சிவம்.நமக்கு தெரியாத பிரபஞ்ச சக்திகள் பூமியின் மீது அன்பு கொண்டிருப்பதால்தான் பூமி இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது

ஜீவகாருண்யம்

பக்குவப்பட்ட ஞானிகள் உயிர் உள்ள தாவரங்களை, காய் கனிபோன்றவைகளை புசிக்க மாட்டார்கள். மரங்களிலிருந்து உலர்ந்து உதிர்ந்த காய்ந்த இலை களை மட்டுமே புசிப்பார்கள். சதா சர்வகாலமும் தியானத்தில் இருப்பார்கள். பூச்சிகள் கடித்து உடலில் புண் உண்டானாலும் அதற்கு மருந்திட மாட்டார்கள்.புண்களில் புழுக்கள் உண்டாகி அவை குடைவதைக்கண்டு வருந்தமாட்டர்கள்.புழுக்கள் ஏதேனும் புண்களில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டாலும் அவைகளைப் பொருக்கி எடுத்து புண்களில் விட்டு அவை குடைவதைக்கண்டு ஆனந்தம் அடைவார்கள். எங்கோ படித்தது.

 மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அவைகளை புசிக்காமளிருத்தல் ஒரு வறட்டு ஜீவகாருண்யம் என்றால் தாவரங்களையும் காய் கனிகளையும் புசிக்காது புழுக்கள் புண்களில் குடைவதைக் கண்டு இன்பம் அடைதல் என்பது ஒரு முரட்டு ஜீவகாருண்யம்தான்

Wednesday, 30 April 2014

ஆன்மா

ஆன்மா
.ஆன்மா இருக்குமிடம் உடம்பாகிய ஆலயத்தினுள்தான்.உடம்பினுள் உயிர்,உயிருக்குள் மனம்,மனத்துள் அறிவு,அறிவினுள்.ஆன்மா உள்ளது.அதன் பொறுப்பு ஒரு பார்வையாளனாக ஒடுங்கி இருப்பதுதான்.உடல் உயிர் மனம் ஆகியவற்றின் வினைப்பதிவுகளை பிரபஞ்சப் பதிவேட்டில் பதிவு செய்வது மட்டுமே ஆன்மாவின் பணி.உடல் இயக்கம் நின்றவுடன் ஆன்மாவும் அகன்றுவிடும். ஆன்மாவின் வடிவம் ய .

Tuesday, 29 April 2014

மரபணு

பல மிருகங்களின் மரபணுக்களின் கலவைதான் மனிதனின் மரபணு.சிலரை கூர்ந்து கவனித்தால் மிருகங்களின் சாயல் நன்றாகவே தெரியும்

வினை

பாவமும் புண்ணியமும் தனித்தனி அல்ல.இரண்டுக்கும் பொதுவான பெயர் வினை.வினைகள் யாவும் பதிவு செய்யப்படுகின்றன.அவரவர் வினைகளை அவரவர்களோ அல்லது சந்ததியினரோ அறுவடை செய்யவேண்டும்

Sunday, 23 March 2014

பெண்ணாய் பெற

எங்க ஊரு மதுரை. நான் சிறுவனாக இருக்கும்போது தெருவில் குழாயடியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் பெண்மணிகள் யாராவது குடத்தை தூக்கி இடுப்பில்வைப்பதர்க்கு உதவ சொல்லுவார்கள். நான் அப்படி தூக்கி விட்டவுடன் அவர்கள் அடிக்கடி சொல்லுவது என்னவென்றால் "உன் பொண்டாட்டி வெறும் பெண்ணாய் பெற " என்று சொல்லுவார்கள். எனக்கு இரண்டு பெண்கள் ஒரு பையன்.
வாழ்க வளமுடன்.

Tuesday, 11 March 2014

திருமந்திரம்

நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்

Tuesday, 28 January 2014

காலம்

1954--70 குழந்தை பருவம் முதல் S.S.L.C முடிக்கும் வரை, காலம் மெதுவாகப்போனது. 1970--80 கொஞ்சம் வேகமாகப்போனது,கல்லூரி,கல்யாணம், மூன்று பிள்ளைகள் ,குழந்தை வளர்ப்பு,விவசாயம்:  1980--2000 அரசுப்பணி சென்னை வாழ்க்கை படு வேகமாகப் போனது: 2000--2013 பிணி, பேரன் பேத்திகள்,பணி ஓய்வு,பென்ஷன் காலம் எப்படி போனது என்றே தெரியவில்லை.2014-மூப்பு,சாக்காடு.....

Thursday, 23 January 2014

வண்ண நிலவன்

முப்பது ஆண்டுகளுக்கு முன் நானும் வண்ண நிலவன்  அவர்களும் பஸ்சில் சென்று கொண்டு இருந்தோம்.அப்போது அவர் துக்ளக் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிசெய்து கொண்டிருந்தார்..அவரிடம் எஸ்தர் மற்றும் கடல்புரத்தில் படி த்ததாக சொன்னேன். மேலும் அடுத்ததாக என்ன வெளியிடப்போகிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் நாவல் சிறுகதைகள் போன்றவைகளை எழுதுவது எல்லாம் பைத்தியக்காரத்தனமோ என்று சிலசமயம் எனக்கு தோன்றுகிறது என்று சொன்னார்.
அதன் பிறகு எனக்கும் இலக்கிய ஆர்வம குறைந்து வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.