Sunday, 25 October 2015

ஐவகை பிரபஞ்ச இயக்கம்







சிற்பரஞ்சோதி சிவானந்தக் கூத்தனைச்
 சொற்பதமாம் அந்தச் சுந்தரக் கூத்தனை
பொற்பதிக் கூத்தனைப் பொன் தில்லைக் கூத்தனை
 அற்புதக் கூத்தனை யார் அறிவாரோ---திருமந்திரம்



கூத்து---- இயக்கம்,சுவாசம்



பிரபஞ்சப் பெருவழியே சிவம். அதுவே சித்- பரம்- சோதி எனப்படும் சிவமாகும்.
பிரபஞ்ச இயக்கம் ஐவகையாகும்
 அதாவது

 சிவானந்தக் கூத்து ,

சுந்தரக் கூத்து,

பொற்பதிக் கூத்து,

பொற்றில்லைக் கூத்து,

அற்புதக் கூத்து

 என திருமூலர் வகைப் படுத்துகிறார்


Saturday, 24 October 2015

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்  என்பார்கள்.பொதுவாக அண்டம் என்றால் இந்த பிரபஞ்சத்தையும் , பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன. நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும். பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும். அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.

அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும். அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். அண்டத்தில் உள்ள  வேறுபட்ட நட்சத்திரங்களைப் போலவே பிண்டமாகிய உடலும்  பல்வேறுபட்ட  உறுப்புகளையும்  செல்களையும்  கொண்டுள்ளன.

பஞ்ச பூதங்கள் எனப்படுபவை,
நீர்
நெருப்பு
காற்று
நிலம்
ஆகாயம்
ஆகிய ஐந்தாகும். இவைகளைக் கொண்டு தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது .பஞ்சபூதங்கள்  அண்டத்திலும் பிண்டத்திலும் இயற்கையாகவே ஒருசேர  அமையப் பெற்றிருப்பதால்  அண்டமும் பிண்டமும்  ஒன்றினுள் ஒன்று அடக்கம்  ஆகிறது.


வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
     கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
     பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
     நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே— திருமந்திரம்

அண்டத்துக்கும்  பிண்டத்துக்கும்  உள்ள தொடர்பை திருமூலரின் இப்பாடல் 
தெளிவாகப் புலப்படுத்துகிறது. இங்கே கூத்து என்பது  நடனம். அதாவது பிரபஞ்ச இயக்கம். உடல் இயக்கத்துக்கு  அடிப்படையானது கூத்தாகிய சுவாசம் பிரபஞ்ச சுழற்சியும்  உடல் இயக்க சுழற்சியும்  கூத்தாகிய தாண்டவம் ஆகும் என்பது திருமூலர் கருத்து.

கோலங்கள்


வீட்டு வாசலில்  கோலமிடும் பெண்கள்  திருவம்பலச் சக்கரத்தை  அடிப்படையாக வரைந்து  அதன்மேல்  கோலங்கள் வரைவதைப் பார்த்து இருக்கிறேன். வாசலில் வரையும் கோலங்களுக்கும்  வானில் தோன்றும் நட்சத்திரங்களுக்கும்  ஏதேனும் தொடர்பு இருக்கும் என்று நான் கருதுகிறேன். கோலங்களில் விண்வெளி ரகசியங்கள் மறைந்திருக்கலாம்

சிவதாண்டவமே திருவம்பல சக்கரம்

திருமூலர்  சிவதாண்டவத்தின்  வடிவினை திருவம்பலச்சக்கரத்தின் மூலமாக வெளிப்படுத்து கிறார். பிரபஞ்சம் இயங்குவதற்கு  அடிப்படையில் இருவிசைகள் தேவைப்படுகின்றன . அவை ஒன்று நேர்விசை மற்றொன்று எதிர்விசை. இதனைப் பின்வரும் பாடல்களில் பிரிபாஷையில் தெரிவித்துள்ளார்



இருந்த இவ் வட்டங்கள் ஈராறு இரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று 
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே.—திருமந்திரம்



தான் ஒன்றி வாழ் இடம் தன் எழுத்தே ஆகும்/  
     தான் ஒன்றும் அந்நான்கும் தன் பேர் எழுத்து ஆகும்/ 
  தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்தாகும்/  
  தான் ஒன்றிலே ஒன்றும் அவ் அரண்தானே---திருமந்திரம்

மேற்கண்ட பாடல்களை பின் வரும்   காட்சிப் படமாக 
விளக்க முற்பட்டுள்ளேன். இச்சக்கரத்தில்  நேர்விசையாக + குறியீடும் எதிர்விசையாக x  குறியீடும்  கொடுக்கப்பட்டுள்ளது. நேர்விசை சிவமாகவும் எதிர்விசை சக்தியாகவும் பொருள் கொள்ள வேண்டும்
தெரிந்தோ தெரியாமலோ  ஆங்கிலேயர்கள்  இந்த சக்கரத்தினை தமது தேசியக் கொடியில் வைத்து உலக மெல்லாம்  ஆண்டனர்.

Thursday, 8 October 2015

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்



கோபுர தரிசனம்  கோடி புண்ணியம் என்பார்கள். பலரும் அதற்கான ஆன்மீக விளக்கங்களும்,அறிவியல் பூர்வமான விளக்கங்களும் கொடுத்துள்ளனர். நானும் பல கோவில்களுக்குச் சென்று  கோபுரங்களை  பார்த்திருக்கிறேன். தமிழர்களின் சிற்பக்கலைக்கு கோபுரங்கள் சாட்சியாக வானுயர  உயர்ந்து நிற்பது ஒருவித பரவசத்தியே  உண்டு பண்ணுகிறது.
பொதுவாக மனிதர்கள் நாம் பிறந்த மண்ணாகிய இந்த பூமியையே உற்று நோக்குவதை  பிரவித்தொழிலாகக் கொண்டுள்ளனர்.மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் தவிர  தங்கம் ,வெள்ளி, இரும்பு முதலிய உலோகப் பொருள்களும்,பெட்ரோலியப் பொருட்களும் ,நவரத்தினங்களும்,இரசாயனங்களும்,மூலிகைகளும், , மற்ற பொருட்களும் மண்ணில் இருந்தே மனிதன் எடுத்துக் கொண்டு தன் பிறவிப் பயன் மறந்து திரிந்து கொண்டு இருக்கிறான்.

தன அடையாளத்தைத் தொலைத்த மனிதனின் கவனத்தை  விண்நோக்கி திருப்புவதன் பொருட்டே  அக்கால ஞானிகள்  வானுயர்ந்த  கோபுரதரிசனம்  நல்ல விஷயம் என்று அது கோடி புண்ணியம் தரும் என்று சொல்லி வைத்தார்கள் என்று நினைக்கிறேன்
விண்வெளியில்  கொட்டிக்கிடக்கின்றன கோடானுகோடி அற்புதங்கள். கோடிக்கணாக்கான சூரியர்களும் சந்திரர்களையும் தவிர என்னவெல்லாமோ  மனிதனின் அறிவுக்கு எட்டாத  ரகசியங்களைக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். அந்த பிரபஞ்ச ஞானத்தை ஓரளவு  அறிய முயற்சிப்பதுதான்  இன்றைய நவீன விஞ்ஞானம்

பிரபஞ்ச ஞானத்தை  அறிய முற்பட்ட சித்தர்களும்  ஞானிகளும் தமது திறமைக்கு  ஏற்ப  அறிந்த தகவல்களை  முழுமையாகப் பதிவு செய்யவில்லை..அதனால்தான் அவர்கள் அறிந்த விஷயங்கள்  காலத்தால்  மறக்கப் பட்டுவிட்டன. நமக்கு கிடைத்த அவர்களது  சில ஆய்வுகளே  சோதிடக் கலையாகவும்,மருத்துவ நூல்களாகவும், யோக சாத்திரங்கலாகவும் நமக்கு கிடைத்துள்ளன. அவைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களின் எண்ணிக்கையும்  நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிறது..

மனிதன் பிரபஞ்ச அறிவைப் பெற முடியும்  என்பதை யோக கலை பயிற்சியின் மூலம் தேய்ந்து கொள்ள முடியும் என்பதை பிற்கால  சித்தர்கள் தமது அட்டமா சித்து வேலைகள் மூலமாக  மக்களுக்கு புலப்படுத்தியுள்ளனர்.


 எனவேதான்  மண்ணைத்தவிர்த்து  கொஞ்சம்  விண்ணையும்  பார் என்று சொல்வதற்குத்தான் அதில்  கொட்டிக்கிடக்கின்றன கோடி கோடி அற்புதங்கள்  என்பதற்காக  கோபுரதரிசனத்தை வலியுறுத்தினார்கள் என்று நான் கருதுகிறேன் கோடி புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்  நாம் கொஞ்சம் விண்ணையும்  பார்க்கலாமே.
வாழ்க வளமுடன்
ஏகாம்பரநாதர்  கோவில், காஞ்சிபுரம்




Thursday, 1 October 2015

தசவாயுக்கள்

 உடலில் உள்ள  பத்து வாயுக்கள்.

 1. பிராணன்- உடலில் தோன்றி உடலை இயக்குவது.

 2. அபானன்- மூச்சு வழியாக உடலில் புகுந்து மூலாதாரம்வரை செல்வது.,

 3. சமானன்- உணவைச் சீரணிக்கச் செய்வது,

 4. உதானன்- உந்தியிலிருந்து மேல் நோக்கிப் போவது.

 5. வியானன்- உடல் முழுவதும் வியாபித்து இரத்தம் செல்ல உதவுவது. 

6. நாகன்- நீட்டி முடக்கவும், பேசவும், விக்கலுக்கும் உதவுவது.

 7. கூர்மன்- விழித்தல், இமைத்தல், மயிர் சிலித்தல் செய்வது.

 8. கிரிகரன்- தும்மல், இருமல், வெம்மை, சினம் இவற்றை உண்டாக்குவது.

 9. தேவதத்தன்- ஓட்டம், இளைப்பு, வியர்வை, கொட்டாவி ஆகியன செயலபடுத்துவது.

 10. தனஞ்சயன்- உடல் இறந்தபின் உடலில் இருந்து அதை மண்ணோடு கலக்கச் செய்வது,