சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய மனோன்மணியம் நாடகத்தில் வரும் சுந்தர முனிவர் அரசன் மகள் திருமணம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு காரணமாக இப்படி கூறுகிறார் "" குழவிப் பருவம் நழுவும் காலை களிமிகு கன்னியர் உளமும் வாக்கும் புளியம் பழமும் தோடும் போலாம் "
ஆகா . என்ன அருமையாக சொல்லி இருக்கிறார் . கல்லூரி கால வசந்த நினைவுகள்.
மனோன்மணீயத்தில் மற்றும் ஒரு காட்சி:
நடராஜன் என்பவன் குடிலன் (மந்திரி) மகள் வாணியைக் காதலிப்பான்
இது பிடிக்காத சகடர் என்பான் அரசன் ஜீவகன் முன்பாக நடராஜனைப்
பற்றி பிவருமாறு சொல்லுவான்
காவலா ! அவனைப் போலயான் கண்டிலன்
சுத்தமே பித்தன். சொல்லுக் கடங்கான்.
தனியே யுரைப்பன். தனியே சிரிப்பன்.
எங்கெனு மொருபூ இலைகனி யகப்படில்
அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியிற் றலைதடு மாறுவன்.
பரற்கலு மவனுக் ககப்படாத் திரவியம்
ஆயிரந் தடவை யாயினு நோக்குவன்.
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?
என்பான். இக்காட்சியும் வரிகளும் மனதில் நன்கு பதிந்து விட்டன. சகடரின் கூற்று நினைத்து நினைத்து நகைப்புக்குரியது.

No comments:
Post a Comment