சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தது வாழைக்காய் பொரியல்,கூட்டு,சிப்ஸ் எல்லாம். முப்பத்தி ஐந்து வயது வரை எந்த பிரச்சனையும் இல்லை.அதன் பிறகு ரத்தக் கொதிப்பு,அல்சர், பிறகு சர்க்கரை என எல்லாம் வந்து ஒட்டிக்கொண்டன.உணவுக் கட்டுப்பாடு என்று சிலவற்றை ஒதுக்க வேண்டி வந்தது. அதில் இந்த வாழைக்காயும் ஒன்று. அது வாய்வு என்று சொல்லி எனக்கு கொடுக்க மாட்டார்கள். எப்பொழுதாவது சாப்பிட்டால் அது வயிற்றிலோ அல்லது மார்பிலோ வாயு தங்கிக்கொண்டு பலவித உபாதைகள் கொடுக்கும்.நெஞ்சுவலி வந்து மரண பயம் உண்டாக்கும். எங்கே செத்துப் போய்விடுவோமோ என்ற பயம் வேறு வந்துவாட்டும்.
பிறகு என்ன வாயு நிவாரண மருந்துகள் பயன் படுத்தி சரி செய்வதற்குள் அப்பாடா என்று ஆகிவிடும்.
சில ஆண்டுகளுக்கு முன்திருமந்திரம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பின்வரும் மந்திரம் எனக்கு புதிய சிந்தனையைக் கொடுத்தது
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி மாதரோடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தது ஒழிந்தாரே---திருமூலர்
அப்புறம் என்ன எல்லாவற்றையும் மறந்து வாழைக்காய் மீண்டும் விருப்ப உணவாக ஆகிவிட்டது..வாயுவும் இல்லை வயிற்று வலியும் இல்லை.

No comments:
Post a Comment