Tuesday, 8 January 2013

சீப்பு

1966 ம் ஆண்டு நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது எப்பொழுதும் பாக்கெட்  ல் சீப்பு வைத்துக் கொண்டு இருப்பேன்.அடிக்கடி தலை வாரிக் கொள்ளும் பழக்கம் இருந்தது எனக்கு.வீட்டுக்கு அருகில் உள்ள நூலகத்துக்கு சென்று கதைப் புத்தகங்கள் படிப்பேன். ஒரு நாள் நூலகர் என்னிடம், இன்னும் எத்தனை நாளுக்கு சீப்பு வைத்து தலை சீவுவ?
என்று என்னிடம் கேட்டார். நான் சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் வந்து விட்டேன்.
ஒரு மாதம் கழித்து என் தாயார் அகால மரணம் அடைந்து நான் மொட்டை அடிக்கவேண்டியது ஆகிவிட்டது.சீப்பு வைத்ததனால்தான் அம்மா இறந்து விட்டாரோ என்று நினைத்தேன். இனிமேல் சீப்பு வைக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அப்படி சீப்பு வைத்தால் தந்தைக்கு  ஏதாவது நேர்ந்து விடுமோ என்று கலங்கினேன்.

 1993      ம் ஆண்டு தந்தை இறந்து விட்டார்.அதன் பிறகும்  நான் சீப்பு வைக்கவில்லை ,தலையில் முடியும் இல்லை. அதன் பிறகு என் சகோதரிகள் ,சகோதரர்கள் அனைவருமே  இறந்து விட்டனர்.
  வாழ்க்கை நிலையாமை பற்றி புரிந்து கொள்ள இந்த திருமந்திரம் பற்றி சிந்திக்கலாம்

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே----திரு மூலர்



No comments:

Post a Comment