Sunday, 5 July 2015

#கனவில்அம்மாஅப்பா

எனக்கு 12 வயது  ஆகும்போது அம்மா  இறந்துவிட்டார்கள்.
அப்போது  அம்மாவுக்கு 43  வயது. அம்மா இறந்த பிறகு அடிக்கடி  கனவில் வருவார்கள். கனவில் நான் அம்மாவிடம் கேட்கும்  கேள்வி  நீதான்  செத்துப்போய்ட்டியே  அப்புறம் எப்படி அம்மா  உசிரோடு  இருக்கீங்க  என்றுதான் கேட்ப்பேன். அம்மா  அதற்கு  "நான் சாகவில்லை"  என்றுதான் பதில்  சொல்லுவார்கள்.
சுமார் 25  ஆண்டுகள்  கனவில் அம்மா வந்தார்கள் . அப்புறம் வரவில்லை . எந்தந்தையிடம்  அம்மா கனவில்  வருவதில்லையே ஏன்? என்று கேட்டேன் . அதற்கு  அவர் "அம்மா  ஆவி உலகத்திலிருந்து  மேல் உலகம் சென்றிருக்கும்" என்று சொன்னார்கள். சில ஆண்டுகள்  கழித்து அப்பாவும்  இறந்துவிட்டார்கள்.

பிறகு அப்பா  மட்டும்  அடிக்கடி கனவில்  வருவார் அவரிடமும் அம்மாவிடம் கேட்ட  கேள்விதான் கனவிலும் கேட்டேன். அப்பாவும் தான் சாகவில்லை என்றுதான்  பதில் சொல்லுவார் இன்னும் அப்பா கனவில் வந்து கொண்டுதான் இருக்கிறார்
அம்மா இறந்து 49  ஆண்டுகள்  முடிந்துவிட்டன.
நேற்றைய கனவில் 25 ஆண்டுகள்  கழித்து அம்மா வந்தார்கள். ஆனால் சற்று முதிய கோலத்தில்  இருந்தார்கள். அம்மாவிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். என்ன பேசினேன் என்பது மறந்து விட்டது.கனவில் அம்மா தனக்கு வயது 92  என்று சொன்னார்கள். அதன் பின் ஒரு சிறிய 'ஈ' போல உருமாறி பறந்து  சென்று ஒரு புள்ளியாகி  மறைந்துவிட்டர்கள். நான் திகைத்து நிற்கையில்  என் தந்தையார்  கனவில் என்னிடம் வந்தார். அம்மாவிடம்  ரெம்ப நேரம் பேசினாயா? என்று கேட்டார். அத்துடன் கனவு கலைந்தது. காலை  எழுந்தவுடன்  அம்மாவின் தற்போதய  வயது என்ன என்பதை  கணக்குப் போட்டு பார்த்தேன்  அம்மா கனவில்  சொல்லியபடி 92.




No comments:

Post a Comment