Friday, 6 December 2013

சின்னப்பெருமாயி

நான் சம்மந்தம் பண்ணின ஊருல சின்னப்பெருமாயி என்ற இளம்பெண் இருந்தாள். அவள் பேரழகி.அள்ளிமுடிந்து கொண்டை போட்டு காதுல சவுடியும் தொங்கப்போட்டு இருப்பா.பொண்ணு கேட்டு வரும் இளந்தாரிப்பயல்களை சொட்டை சொல்லி வேணாம்னு சொல்லிருவா.காதல் கீதல் எதிலும் சிக்க அந்த ஏரியாவில அம்சமான மாப்பிள்ளை இல்ல.நாட்கள் கடந்தன. கிணத்து மண்னு அள்ள கூலி வேலைக்கு போனவள் படிக்கட்டில் இருந்து தவறி கிணத்துக்குள்ள விழுதுட்டா. மூஞ்சி மொகரையில அடிபட்டு ஆஸ்பத்திரியில தையல் போட்டு அவ முகமே மாறிப்போச்சு.கிழவி ஆன பின்னாலும் சின்னப்பெருமாயி கன்னியாகவே இருக்குறா.

1 comment:

  1. After reading this news,I think of "ELEGY written in a country Churchyard"
    which I studied in my intermediate class in 1949-1951.
    Poor lady she did not get opportunity.Had she lived in a big city,she would have become a cine actress or would have lived a better quality life.
    Recently I read a news that a simple middle class housewife got the opportunity to become cine play back singer after her voice was heard in 'You Tube' by a cine Director.He cancelled the contract of famous singer Shreya Ghosal with this lady.

    ReplyDelete