Monday, 23 December 2013

மந்தாரை பூ

 மந்தாரைஇலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச்  சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன. 

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை  காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது.  மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும்  இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். 

மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால்  வரும் பேதி நின்று உடல் நலம் பெறும். முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள்,  ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். 

மந்தாரை இலைகள் வாதநோய், கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதயநோய், படபடப்பு,  ஆகியவற்றை  குணப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. மேலும் வயிற்றுபோக்கு படுக்கையில் சிறுநீர்கழித்தல், அதிக பித்த நீரால் ஏற்படும் மலேரியா காய்ச்சல்,  பொடுகு, முடி உதிர்வதை குறைத்தல், மூலநோய் போன்ற அனைத்திற்கும் ஊமத்தையின் இலை பெரிதும் பயன்படுகிறது.    

Friday, 20 December 2013

சாதி

சாதி என்பது இரத்தவகை போன்றது.மாற்றவும் முடியாது ஒழிக்கவும் முடியாது.அது ஒருபக்கம் இருந்துவிட்டு போகட்டும்.வயிற்றில் மலம இருக்கிறதே என்று வருத்தப்பட்டுக்கொண்டா இருக்கிறோம்?

Friday, 6 December 2013

சின்னப்பெருமாயி

நான் சம்மந்தம் பண்ணின ஊருல சின்னப்பெருமாயி என்ற இளம்பெண் இருந்தாள். அவள் பேரழகி.அள்ளிமுடிந்து கொண்டை போட்டு காதுல சவுடியும் தொங்கப்போட்டு இருப்பா.பொண்ணு கேட்டு வரும் இளந்தாரிப்பயல்களை சொட்டை சொல்லி வேணாம்னு சொல்லிருவா.காதல் கீதல் எதிலும் சிக்க அந்த ஏரியாவில அம்சமான மாப்பிள்ளை இல்ல.நாட்கள் கடந்தன. கிணத்து மண்னு அள்ள கூலி வேலைக்கு போனவள் படிக்கட்டில் இருந்து தவறி கிணத்துக்குள்ள விழுதுட்டா. மூஞ்சி மொகரையில அடிபட்டு ஆஸ்பத்திரியில தையல் போட்டு அவ முகமே மாறிப்போச்சு.கிழவி ஆன பின்னாலும் சின்னப்பெருமாயி கன்னியாகவே இருக்குறா.

Friday, 11 October 2013

சிவலிங்கம்

சிவலிங்கம் என்பது என் சிந்தனைப்படி அது விண்வெளியில் தவழும் ஒரு கேலக்சி(galaxy) ஆகும்.ஆவுடை என்று சொல்லப்படுவது சுழன்று வரும் பால் வெளி மண்டலங்கள் ஆகும். நடுவில் இருக்கும் லிங்கம் என்பது black hole எனறு சொல்லப்படும் cosmic pillar அதாவது கரும் புள்ளி. பூமியும் ஒரு galaxy ல் அமைத்துள்ளது. இதனை நம் முன்னோர்கள் தமது ஞான திருஷ்டியில் உணர்ந்து லிங்கத்தின் வடிவத்தினை தீர்மானித்துள்ளார்கள்.


Namasivayam Muthu's photo.

Thursday, 10 October 2013

கோலம்


கோலங்களில் பிரபஞ்ச ரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன.கோலம போடுபவர்களுக்கு இது தெரியாது.வீடு 
வாசல் இல்லாதவர்கள் எங்கே போடுவார்கள்? படிப படியாக சின்ன சின்ன கோலங்களை கவனித்து பார்த்து ஆழ்ந்து சிந்தனை செய்தால் உள்மனம் பலவித வானவியல் விளக்கங்களை சொல்லும்.முயற்சி திருவினை ஆக்கும். கோலம்போடுவதால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வது கோலம போடும் கலையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்ற காரணத்துக்குத்தான். வாழ்க வளமுடன்

Thursday, 19 September 2013

மருதாணி

மருதானி முன்னாடி உள்ளங்கையில நாலு புள்ளி வச்சு நடுவுல ஒரு பெரிய பொட்டு வைப்பாங்க பாக்க அழகா இருக்கும். இப்போ வைக்கிற மருதாணி பவுடர் கோலம எப்படி இருக்குன்னா சாக்கடையில கைய விட்டுட்டு கழுவாம வந்த மாதிரி இருக்கு

Wednesday, 18 September 2013

தந்தை முத்துதேவர்



 முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.தந்தை இறந்த வருத்தம் தெரியவில்லை. வாரம் இரண்டு முறையாவது கனவில் வருவார்.கனவு என்றால் கொஞ்சநேரம் வந்து போவதல்ல. விடிய விடிய கனவுதான்.தந்தை இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என்ற உணர்வு கனவிலும் நனவிலும் உணர முடிகிறது.

Tuesday, 17 September 2013

சர்வஞான போதினி

சர்வஞான போதினி , மகான் பொன்னம்பலம் எழுதியது ,1946 ம்  ஆண்டு

விருதுநகரில் இருந்து 


வெளியிடப்பட்டது.ஆன்மீகத்தில் (அதாவது பக்தி மார்க்கத்திற்கு அடுத்த 

நிலை)நாட்டமுள்ள அன்பர்கள் முடிந்தால் இந்த 

புத்தகத்தை தேடி பிடித்து 


படித்துப்பாருங்கள். எப்பொழுதாவது ஆன்மீக நூல்களை படிக்கும் நான் இத்த

புத்தகத்தை படித்த பின் வேறு எந்த


 நூலையும் படிக்கும் ஆர்வம இல்லாமல் போய்விட்டது. காரணம் அதில்

சொல்லப்பட்ட விஷயங்கள் என்னை 


சிந்திக்க வைத்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை.அதற்கு விடை 

தெரியாமல் வேறு புத்தகம் படிக்கும் எண்ணம்


வராமல் போய்விட்டது.


இந்தநூல் சென்னை தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ளது

Tuesday, 3 September 2013

புளியமரம்

 சிறுவயதில்  புளிய மரத்தில்  நான்பலமுறை கல் எறிந்தும் அது என்னமோ எனக்கு பழம் விழவே  விழாது. ஒரு ஊமை பையன் நன்றாக கல் எறிவான் பழங்கள் கொட்டும்.அதை பொறுக்கும்போது அவன் விட்ட   கல்ஒன்று என் தலையில் விழுந்து என் மண்டை உடைந்துதான் மிச்சம். 

Tuesday, 16 July 2013

பரம்

பரத்தினுள் மண்டலங்கள் அடக்கம், மண்டலத்தில் பூதங்கள் அடக்கம்,பூதங்களில் சடங்கள் அடக்கம்,சடங்களில் செயல்கள் அடக்கம்,செயல்கள் பரத்தின் இயல்பே-- மகான் பொன்னம்பலம், சர்வஞான போதினி 1946

Saturday, 27 April 2013

இராமேஸ்வரம்

பதினாலு வயதில் 1968 ல் இராமேஸ்வரத்தில் ஒரு மாதம் தங்கி இருந்தது பசுமை நினைவுகளாக மனதில் பதிந்துள்ளது.தினசரி கடல் குளியல்,கோவில் வலம்,கோடி தீர்த்தம்,கந்தமாதன பர்வதம்,ஜெயிலாணி தியேட்டரில் படம்,உப்புக்காற்று,மீன் வாசனை,படகில் சென்று கப்பலில் ஏறி கேப்டனுடன் அருந்திய காபி....
கருவாடு,ஆமைக்கறி,சங்கு மோதிரம்,என்.எஸ்.கண்ணன்,ராம கிருஷ்ணன்,இந்திராணி,ஆகியோருடன் கொண்ட  இளவயது  நட்பு...... மீண்டும் ஒருமுறை இராமேஸ்வரம் செல்ல  முடியுமா?

Wednesday, 13 March 2013

Banalinga

Banalinga, a stone found in nature, in the bed of the Narmada river in Madhya Pradesh state, India, is an iconic symbol of worship, based on either the scriptures or cultural traditions among the Hindus, particularly of the Shaivaites and Smartha Brahmins. Stones are ancient and connote divinity. It is a smooth ellipsoid stone.
Banalinga is also called the Svayambhu Linga: (Sanskrit) "Self-existent mark or sign of God", as it is discovered in nature and not carved or crafted by human hands.
The forms of Linga can vary in detail from a simple roller shape roughly cylindrical Banalinga to the stone carved with a thousand facets (Sahasralinga) or of light relief in several human figures (Mukhalinga). The Linga in the shrine of a temple is in stone.



Tuesday, 26 February 2013

மனம்

மனம் ஒரு குப்பை தொட்டிதான்.அதில் அறிவு என்ற செடியை நட்டு வைத்தால் செடிக்கு  நல்ல உரமாகும்

Sunday, 20 January 2013

நாட்டுப்புறக் கலைகள் : கரகாட்டம் வீடியோ


நாட்டுப்புறக் கலைகள் : காவடி ஆட்டம் வீடியோ


நாட்டுப் புறக் கலைகள்: பெரும்பறை ஆட்டம் வீடியோ


இலக்கிய வட்டம்

இலக்கிய வட்டத்திலிருந்து விலகி முப்பது வருஷம் ஆச்சு. இப்போ அங்க என்ன நடக்குதுன்னு தெரியல.முப்பது வருஷம் முன்னாடி இந்தி பிரச்சார சபைல ஒரு கருத்தரங்கம் நடந்தது.ஜே ஜே சில குறிப்புகள் --தலைப்பு. மாஸ்கோ மகாதேவன் தலைமை, அம்பை,ஜி.கேசவன் ஆகியோர் உரை.அப்போது ஞாநி யுடன் வந்த ஒரு பையன் கலாட்டா செய்து கொண்டு இருந்தான். என்னுடன் வந்த தோழர்களிடம் யாரென்று கேட்டேன்.அவர்கள் சொன்னார்கள்,கணையாழி க்ரூப் விமலாதித்த மாமல்லன் என்று.

folk dances of tamilnadu,thappattam,video


folk dances of tamilnadu,kolattam,video part 2


folk dances of tamilnadu,naiyandimelam video


Saturday, 19 January 2013

நாட்டுப்புறக் கலைகள்,


நாட்டுப்புறக் கலைகள்,மயிலாட்டம்



நாட்டுப்புறக் கலைகள்,கோலாட்டம்,pic 1--4





நாட்டுப்புறக் கலைகள், விலங்கு ஆட்டம்


நாட்டுப்புறக் கலைகள்,விலங்கு ஆட்டம்


நாட்டுப்புறக் கலைகள்,புலி ஆட்டம்


நாட்டுப்புறக் கலைகள்,புலி ஆட்டம்


நாட்டுப்புறக் கலைகள்,கலைஞர்கள்


நாட்டுப்புறக் கலைகள்,நையாண்டி மேளம் pic 1--4




நாட்டுப்புறக் கலைகள்,தப்பாட்டம்


நாட்டுப்புறக் கலைகள்,தப்பாட்டம்


நாட்டுப்புறக் கலைகள் ,கலைஞர்கள்


நாட்டுப்புறக் கலைகள்,கலைஞர்கள்


நாட்டுப்புறக் கலைகள்,தேவர் ஆட்டம்


நாட்டுப்புறக் கலைகள்,தேவர் ஆட்டம்


நாட்டுப்புறக் கலைகள், காவடி ஆட்டம்


நாட்டுப்புறக் கலைகள்: பெரும்பறை ஆட்டம் pic 1--6