Tuesday, 28 January 2014

காலம்

1954--70 குழந்தை பருவம் முதல் S.S.L.C முடிக்கும் வரை, காலம் மெதுவாகப்போனது. 1970--80 கொஞ்சம் வேகமாகப்போனது,கல்லூரி,கல்யாணம், மூன்று பிள்ளைகள் ,குழந்தை வளர்ப்பு,விவசாயம்:  1980--2000 அரசுப்பணி சென்னை வாழ்க்கை படு வேகமாகப் போனது: 2000--2013 பிணி, பேரன் பேத்திகள்,பணி ஓய்வு,பென்ஷன் காலம் எப்படி போனது என்றே தெரியவில்லை.2014-மூப்பு,சாக்காடு.....

Thursday, 23 January 2014

வண்ண நிலவன்

முப்பது ஆண்டுகளுக்கு முன் நானும் வண்ண நிலவன்  அவர்களும் பஸ்சில் சென்று கொண்டு இருந்தோம்.அப்போது அவர் துக்ளக் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிசெய்து கொண்டிருந்தார்..அவரிடம் எஸ்தர் மற்றும் கடல்புரத்தில் படி த்ததாக சொன்னேன். மேலும் அடுத்ததாக என்ன வெளியிடப்போகிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் நாவல் சிறுகதைகள் போன்றவைகளை எழுதுவது எல்லாம் பைத்தியக்காரத்தனமோ என்று சிலசமயம் எனக்கு தோன்றுகிறது என்று சொன்னார்.
அதன் பிறகு எனக்கும் இலக்கிய ஆர்வம குறைந்து வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.