Thursday, 19 September 2013

மருதாணி

மருதானி முன்னாடி உள்ளங்கையில நாலு புள்ளி வச்சு நடுவுல ஒரு பெரிய பொட்டு வைப்பாங்க பாக்க அழகா இருக்கும். இப்போ வைக்கிற மருதாணி பவுடர் கோலம எப்படி இருக்குன்னா சாக்கடையில கைய விட்டுட்டு கழுவாம வந்த மாதிரி இருக்கு

Wednesday, 18 September 2013

தந்தை முத்துதேவர்



 முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.தந்தை இறந்த வருத்தம் தெரியவில்லை. வாரம் இரண்டு முறையாவது கனவில் வருவார்.கனவு என்றால் கொஞ்சநேரம் வந்து போவதல்ல. விடிய விடிய கனவுதான்.தந்தை இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என்ற உணர்வு கனவிலும் நனவிலும் உணர முடிகிறது.

Tuesday, 17 September 2013

சர்வஞான போதினி

சர்வஞான போதினி , மகான் பொன்னம்பலம் எழுதியது ,1946 ம்  ஆண்டு

விருதுநகரில் இருந்து 


வெளியிடப்பட்டது.ஆன்மீகத்தில் (அதாவது பக்தி மார்க்கத்திற்கு அடுத்த 

நிலை)நாட்டமுள்ள அன்பர்கள் முடிந்தால் இந்த 

புத்தகத்தை தேடி பிடித்து 


படித்துப்பாருங்கள். எப்பொழுதாவது ஆன்மீக நூல்களை படிக்கும் நான் இத்த

புத்தகத்தை படித்த பின் வேறு எந்த


 நூலையும் படிக்கும் ஆர்வம இல்லாமல் போய்விட்டது. காரணம் அதில்

சொல்லப்பட்ட விஷயங்கள் என்னை 


சிந்திக்க வைத்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை.அதற்கு விடை 

தெரியாமல் வேறு புத்தகம் படிக்கும் எண்ணம்


வராமல் போய்விட்டது.


இந்தநூல் சென்னை தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ளது

Tuesday, 3 September 2013

புளியமரம்

 சிறுவயதில்  புளிய மரத்தில்  நான்பலமுறை கல் எறிந்தும் அது என்னமோ எனக்கு பழம் விழவே  விழாது. ஒரு ஊமை பையன் நன்றாக கல் எறிவான் பழங்கள் கொட்டும்.அதை பொறுக்கும்போது அவன் விட்ட   கல்ஒன்று என் தலையில் விழுந்து என் மண்டை உடைந்துதான் மிச்சம்.