Saturday, 27 April 2013

இராமேஸ்வரம்

பதினாலு வயதில் 1968 ல் இராமேஸ்வரத்தில் ஒரு மாதம் தங்கி இருந்தது பசுமை நினைவுகளாக மனதில் பதிந்துள்ளது.தினசரி கடல் குளியல்,கோவில் வலம்,கோடி தீர்த்தம்,கந்தமாதன பர்வதம்,ஜெயிலாணி தியேட்டரில் படம்,உப்புக்காற்று,மீன் வாசனை,படகில் சென்று கப்பலில் ஏறி கேப்டனுடன் அருந்திய காபி....
கருவாடு,ஆமைக்கறி,சங்கு மோதிரம்,என்.எஸ்.கண்ணன்,ராம கிருஷ்ணன்,இந்திராணி,ஆகியோருடன் கொண்ட  இளவயது  நட்பு...... மீண்டும் ஒருமுறை இராமேஸ்வரம் செல்ல  முடியுமா?