Thursday, 13 August 2015
Tuesday, 11 August 2015
#பிள்ளையார் #கணபதி #PILLAIYAAR #GANAPATHY
#பிள்ளையார்என்பது பூமிதத்துவம்
மண், ஆசை ,ஈர்ப்பு. உயிர் இருக்கும்வரை உடலை பற்றிக்கொண்டிருப்பார். உயிர் நீங்கியவுடன் உடலைத் தின்றுவிடுவார்.
He is an ALIEN / Example = #Narasimmar #Varaahi #Pillaiyaar #Hanuman #Kaamadenu #Nanthi #Jadaayu
மனித முகமல்லாத மாற்று முகங்களை கொண்ட புராண மாந்தர்கள் யாவரும் = #வேற்றுகிரகவாசிகளே
உதாரணம் #நரசிம்மர் #வராஹி #பிள்ளையார் #அனுமன் #காமதேனு #நந்தி #ஜடாயு
Sunday, 19 July 2015
தைராய்டு பிரச்சனை
நெற்றியில் விபூதி வைத்துவிட்டு விரலில் மீதம்உள்ள விபூதியை கழுத்தில் தடவும் வழக்கம் உள்ளவர்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்காது என்று எனக்கு தோன்றுகிறது.. அதாவது தெரிந்தோ தெரியாமலோ
ஸெல்ப் ஹீலிங் ( self healing) முறையில் கழுத்துப்பகுதியில் உள்ள விசுக்தி சக்கரத்தினை activate செய்வது ஒரு காரணமாக இருக்கலாம்

Sunday, 5 July 2015
#கனவில்அம்மாஅப்பா
எனக்கு 12 வயது ஆகும்போது அம்மா இறந்துவிட்டார்கள்.
அப்போது அம்மாவுக்கு 43 வயது. அம்மா இறந்த பிறகு அடிக்கடி கனவில் வருவார்கள். கனவில் நான் அம்மாவிடம் கேட்கும் கேள்வி நீதான் செத்துப்போய்ட்டியே அப்புறம் எப்படி அம்மா உசிரோடு இருக்கீங்க என்றுதான் கேட்ப்பேன். அம்மா அதற்கு "நான் சாகவில்லை" என்றுதான் பதில் சொல்லுவார்கள்.
சுமார் 25 ஆண்டுகள் கனவில் அம்மா வந்தார்கள் . அப்புறம் வரவில்லை . எந்தந்தையிடம் அம்மா கனவில் வருவதில்லையே ஏன்? என்று கேட்டேன் . அதற்கு அவர் "அம்மா ஆவி உலகத்திலிருந்து மேல் உலகம் சென்றிருக்கும்" என்று சொன்னார்கள். சில ஆண்டுகள் கழித்து அப்பாவும் இறந்துவிட்டார்கள்.
பிறகு அப்பா மட்டும் அடிக்கடி கனவில் வருவார் அவரிடமும் அம்மாவிடம் கேட்ட கேள்விதான் கனவிலும் கேட்டேன். அப்பாவும் தான் சாகவில்லை என்றுதான் பதில் சொல்லுவார் இன்னும் அப்பா கனவில் வந்து கொண்டுதான் இருக்கிறார்
அம்மா இறந்து 49 ஆண்டுகள் முடிந்துவிட்டன.
நேற்றைய கனவில் 25 ஆண்டுகள் கழித்து அம்மா வந்தார்கள். ஆனால் சற்று முதிய கோலத்தில் இருந்தார்கள். அம்மாவிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். என்ன பேசினேன் என்பது மறந்து விட்டது.கனவில் அம்மா தனக்கு வயது 92 என்று சொன்னார்கள். அதன் பின் ஒரு சிறிய 'ஈ' போல உருமாறி பறந்து சென்று ஒரு புள்ளியாகி மறைந்துவிட்டர்கள். நான் திகைத்து நிற்கையில் என் தந்தையார் கனவில் என்னிடம் வந்தார். அம்மாவிடம் ரெம்ப நேரம் பேசினாயா? என்று கேட்டார். அத்துடன் கனவு கலைந்தது. காலை எழுந்தவுடன் அம்மாவின் தற்போதய வயது என்ன என்பதை கணக்குப் போட்டு பார்த்தேன் அம்மா கனவில் சொல்லியபடி 92.

Sunday, 10 May 2015
Saturday, 9 May 2015
தணிகை மலை
தணிகை மலை
1999 ம் ஆண்டு தணிகை மலை என்ற சிவ பக்தர் எனக்கு அறிமுகம் ஆனார். அவரும் ஒரு அரசுப்பணியாளர்தான். காவி வேட்டி,கதர் சட்டை, கழுத்தில் உருத்திராட்சை கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை,கால்களில் செருப்பு இல்லாமல் இருப்பார். அவர் முழுநேர சிவத்தொண்டு புரிவார். அன்னதானம் ஏற்பாடு செய்தல் ,சிவ பிரசங்கங்கள் செய்தல் ஆகியவை அவரது தொண்டு.
உடல் நலக் குறைவு காரணமாக நான் நொந்து பொய் இருந்தேன். சாப்பிட்ட மருந்துகளால் எனக்கு பயன் கிட்டவில்லை. எங்கள் மருத்துவர் கடைசியாக என்னிடம் நீங்கள் தியானம் கற்றுக் கொள்வது நல்லது என்று எனக்கு அறிவுறுத்தினார்.
தியானம் எங்கு கற்றுக் கொள்வது என்பது தெரியாமல் இருந்த எனக்கு நண்பர் தணிகைமலை அவர்கள் வேதாத்திரி மகரிஷி குறித்தும் மனவளக் கலை மன்றம் குறித்தும் விவரித்தார். நான் வசித்த சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மனவளக் கலை மன்றத்தின் முகவரியையும் பெற்றுத்தந்தார். நன் அங்கு சென்று முறைப்படி உடற்பயிற்சி மற்றும் தியானமுறைகளைக் கற்றுக்கொண்டேன். ஆறு மாதங்களில் எனக்கு இருந்த உடல்நல க் குறைவு சரியானது. நான் முன்புபோல் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டேன். நான் என்றென்றும் தணிகை மலைக்கு விசுவாசமாக இருக்கிறேன்.
சிலகாலம் அவரை நான் சந்திக்கவில்லை . 2007 ல் ஒருநாள் அவரை எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் வைத்துப் பார்த்தேன். முழு சபாரியுடன் வெற்று நெற்றியுடன், கழுத்தில் கொட்டை இன்றி, கால்களில் ஷூக்களுடன் நின்று கொண்டிருந்தார். என்னைப்பார்த்தும் பாராததுபோல் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருடைய நடை உடை பாவனைகள் யாவும் முற்றிலும் மாறு பட்டு இருந்தன. அவருடைய மாற்றத்துக்கு என்ன காரணம் என்றும் விளங்கவில்லை. நான் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்னை இதுவரை பார்த்ததே இல்லை என்ற வகையில் முகத்தை வைத்திருந்தார். நானும் அவரிடம் எதுவும் பேசாமல் அகன்று விட்டேன். வாழ்க வளமுடன்

Friday, 8 May 2015
சிறுகதை--எனது அனுபவம்
சிறுகதை-- எனது அனுபவம்
1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.
எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து பாராட்டினார். முடிந்தால் அதை குமுதத்தில் வெளிவருவதர்க்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.
எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன் மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.

Subscribe to:
Comments (Atom)

.jpg)