Showing posts with label சித்த மருத்துவம். Show all posts
Showing posts with label சித்த மருத்துவம். Show all posts

Saturday, 11 October 2014

பேரகத்தி பூ

பேரகத்தி பூ ( சீமை அகத்தி)

 இந்த சீமை அகத்தி தமிழ் நாட்டில் தென் மாவட்டத்தில் அதிகமாகஉள்ளது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ளஇடத்தில் நன்கு வளரும். இது ஆற்றுப்படுகைகளில் அதிக உயரமாக வளமுடன் வளரும்.இது ஆறு அடி முதல் 12 அடி வரை வளரக்கூடியது. இது ஒரு புதர் போன்ற சிறு மரம். வெட்ட வெட்டதழைத்து வளரும் இந்தத் தாவரம் பூர்வீகம் மெக்சிகோ நாடு. இதன் இலை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை 50 -80 செ.மீ. நீளம் உடையது.இது அமேசன் மழைக் காடுகளில் அதிகமாகக்காணப்படும் மேலும் பெரு, பிரேசில் , பிரன்சுகயானா, கயானா, வெனிசுலா, கொலம்பியா, ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா,அமரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும். இது அழகுச் செடியாகவும்வளக்கப்படுகிறது. இதன் பூக்கள் மெழுகுவத்தி வைத்தால் போன்றுமஞ்சள் நிறமாக கொத்தாக அழகாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும் வாகை இலைபோன்று. பூக்கள் உதுர்ந்து நீண்ட காய்கள் இருபக்கதுதிலும்அடுக்காகக் காய்க்கும்.இதன் விதைகள்நீள் சதுர வடிவில் அமைந்திருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. 

மருத்துவப்பயன்கள்:

சீமைஅகத்திச் செடியின் இலைகள் அதிகமாக மருத்துவத்திற்குப் பயன்படுகிறது.தோல் வியாதிகளைக் குணப்படுத்துகின்றது. வண்டுகடி, படர்தாமரை, சொறிசிறங்கு, கற்பப்பை கோளாறுகள் பாக்டீரிய்,பூஞ்சல்களைக் கொல்லவும், இரத்த அழுத்தம் குறைவதைக் குணப்படுத்தவும்,வயிற்றுவலி, காய்ச்சல், ஆஸ்த்துமா, அல்சர், பாம்புக்கடி, சிறுநீர் எழிதாகக்கழிய, நுரையீரல் நோய்கள், இரத்த சோகை, மாதவிடாய் சம்பந்தமான நோய்கள், மேலும் மேக நோயான சிபிலிஸ் போன்றவைகளையும் குணப்படுத்தும். இதன் இலையில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு,ஷேம்பு,முகப்பூச்சாகவும் பிலிப்பெயின்சில் பயன்படுத்துகிறார்கள். 
வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைபறித்து எலுமச்சஞ்சாறுடன் சேர்த்து நன்குஅரைத்து வண்டு கடிமீது காலை, மாலைதடவினால் விரைவில் குணமடையும்.
இதன் மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படிகசாயம் வைத்துக் கொடுக்க சிறு நீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.

சீமைஅகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊரவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும். 

படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அறைத்து அதற்கு சமனெடை தேங்காய்எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும்இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும்

Monday, 23 December 2013

மந்தாரை பூ

 மந்தாரைஇலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச்  சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன. 

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை  காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது.  மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும்  இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். 

மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால்  வரும் பேதி நின்று உடல் நலம் பெறும். முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள்,  ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். 

மந்தாரை இலைகள் வாதநோய், கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதயநோய், படபடப்பு,  ஆகியவற்றை  குணப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. மேலும் வயிற்றுபோக்கு படுக்கையில் சிறுநீர்கழித்தல், அதிக பித்த நீரால் ஏற்படும் மலேரியா காய்ச்சல்,  பொடுகு, முடி உதிர்வதை குறைத்தல், மூலநோய் போன்ற அனைத்திற்கும் ஊமத்தையின் இலை பெரிதும் பயன்படுகிறது.    

Sunday, 6 January 2013

பப்பாளிக் காய்


ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயனபடுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்….

யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.
யாருக்கு வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.


பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.


Saturday, 15 December 2012

கருந்துளசி


. காட்டுத் துளசி

காட்டுத் துளசி

இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியைத் தின்பது போல இதனை யாரும் தின்னுவதில்லை. இதனைப் பேத்துளசி எனவும் கூறுவர்.

குணமாகும் நோய்கள

  • உண்ட விஷத்தை முறிக்க.
  • விஷஜுரம்.
  • ஜன்னிவாத ஜுரம்.
  • வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
  • பிரசவ வலி குறைய.
  • அம்மை அதிகரிக்காதிருக்க.
  • வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
  • தோல் சம்பந்தமான நோய் குணமாக.
  • அஜீரணம் குணமாக.
  • குஷ்ட நோய் குணமாக.

Thursday, 13 December 2012

இலுப்பை மரம்

கொத்துக் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்ணிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய வன்மையான மரம். சாறு, பால் தன்மை கொண்டது. இருப்பை, ஓமை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. விதையிலிருந்து எடுக்கக் கூடிய திருவிளக்கெரிக்கப் பயன்படும் எண்ணெய்க்காக திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோப்பு தோப்பாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது. இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது. இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும்; பசிமிகுக்கும், நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும்.

 இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்கிறது.

இதன் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டது.

இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு.


 குன்றா விலுப்பையின்பூ கூர்மதுரம் வாசனையாத்
தின்றாற் பயித்தியமுஞ் சேருங்காண்-மன்றலுறுத்
தார்குழலே பித்தசுரம் தாகந் தணிந்துவிடும்
வார்தயக்க மெய்தும் விழுத்து

- அகத்தியர் குணபாடம்

பொருள் - தீச்சுரம், நீர்வேட்கை நீங்கும். பித்த சுரம் நீங்கும்.

பால் சுரக்க

தாய்ப்பால் சரிவர சுரக்காத பெண்கள் பலவகையான மருந்து மாத்திரைகளை உட் கொள்வார்கள்.  இவை சில சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டு பண்ணும்.  

இந்த இன்னலைப் போக்க இலுப்பை உதவுகிறது. இலுப்பை இலையை மார்பில் வைத்துக் கட்டிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

பூ

“ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை” என்பது பழமொழி. 

இலுப்பைப் பூ இனிப்புச் சுவையுடையது.    இலுப்பைப் பூவை பாகாக்கி, சர்க்கரைக்குப் பதிலாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளதை இப்பழமொழி மூலம் அறியலாம்.

இலுப்பைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.  இதனால் இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.  இரத்தச்சோகை மாறும். 

இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், வெப்பத்தினால் உண்டான சுரம் நீங்கும்.

தீரா தாகம், நீர்ச்சத்து குறைபாடு போன்றவையும் நீங்கும்.

இலுப்பைப்பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தினால் இளைப்பு நீங்கும்.

காய்ந்த இலுப்பைப்பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு வந்தால்  வீக்கம் மறையும்.

இலுப்பைப்பூவைக் காயவைத்து இடித்து வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான மாதவிலக்குக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.

இலுப்பைக் காய்
 இலுப்பைக் காயை கீறினால் பால் வெளிப்படும்.  அந்த பாலை உடலில் தோன்றும் வெண் படலங்களின் மீது தடவினால்  வெண்படலம் விரைவில் குணமாகும்.

இலுப்பைப் பழம்

இலுப்பைப்பழம் நல்ல இனிப்புச் சுவை உடையது.  மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது.

விதை
இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டினால் வீக்கம் விரைவில் குணமாகும்.


 
நெய்(எண்ணெய்)-பிண்ணாக்கு

இலுப்பையின் விதையில் எடுக்கப்படும் எண்ணெய் உடலுக்கு வன்மையும் வனப்பையும் கொடுக்கும்.


எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையே பிண்ணாக்கு எனப்படும்.  இதை ஊறவைத்து நன்றாக அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் சரும வியாதிகள் நீங்கும்.  பழங் காலங்களில் இதனையே நம் முன்னோர்கள் பலர் சோப்பிற்குப் பதிலாக உபயோகித்து வந்துள்ளனர்.

கரப்பா னடருங் கடிசிரங்கு புண்ணும்

உரப்பா மிடுப்புவலி யோடுங் -கரப்பான்
பாகுமொழி மாதே பலமுண்டாந் துற்பலம்
ஏதகுமி லுப்பையி னெய்க்கே
-அகத்தியர் குணவாகடம்

பொருள் - இடுப்பு வலியைப் போக்கும், உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.  ஆனால் கரப்பானை உண்டுபண்ணும் தன்மை கொண்டது.

வேர்


இலுப்பையின் வேரை இடித்து நீரில் கலந்து கொதிக்கவைத்து குடிநீராக அருந்தி வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

Monday, 10 December 2012

நாகலிங்க பழம்


நாகலிங்க மரம்: நந்தீஸ்வரர் கோவில்,கூடுவாஞ்சேரி,


நாகலிங்க மரம்: நந்தீஸ்வரர் கோவில்,கூடுவாஞ்சேரி


இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை.  விஷ சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது. இலைகள் தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது

இலைகளில் உள்ள சத்துக்கள்   எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன
நாகலிங்க பூ
நாகாபரணம் சார்த்தப்பட்ட சிவலிங்கத்தைப் போன்றே அமைப்புள்ள ஓர் அழகிய மலர்தான் நாகலிங்கப்பூ ஆகும். இந்த மலரை தெலுங்கு மொழியில் "நாகமல்லி' என்றும்; "மல்லிகார்ச்சுனம்' என்றும் அழைக்கின்றனர். அழகிய வட்ட வடிவமான வெண்மைநிற ஆவுடை, அதன் நடுவில் சிறிய பாணலிங்கம், சிவலிங்கத்தின்மீது கவிழ்ந்து குடை பிடிப்பது போன்ற எண்ணற்ற தலைகளையுடைய நாகம், ஆவுடையாரைத் தாங்குவதுபோல் குங்கும நிறத்தில் ஐந்து இதழ்கள்- இத்தகைய தோற்றம் கொண்ட ஒரு அழகான மலர்தான் நாகலிங்கப் பூ.
நாகலிங்க மரம் நம் நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதால், இது எந்த தலத்திலும் தல மரமாக இல்லை. இந்த மலரை நாம் நம் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும்போது ஒரு அழகிய சிவலிங்கத் திருமேனியை நாம் நம் கையில் வைத்திருப்பது போன்ற ஒரு மென்மையான உணர்வை அனுபவிக்க முடியும்!

காக்கட்டான்(சங்கு புஷ்பம்)


Sunday, 9 December 2012

சித்தகத்தி (கருஞ்செம்பை)

சித்தகத்தி அல்லது கருஞ்செம்பை: இது ஒரு மூலிகைச் செடி. இது ஒரு குறுமர வகை ஆகும். இதன் பூக்களும்,இலைகளும் மருத்துவக் குணம் கொண்டவை. ஒருதலைவலி அல்லது சாதாரண தலைவலிகள் வராமல் இருக்க, இதன் பூக்களை பறித்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி தினசரி தலைக்கு தேய்க்கலாம்.

சைனஸ்,ஜலதோஷம்,சுவாசக் கோளாறுகளுக்கு இதன் இலைகளை பறித்து வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம்.இது

விரைவாக வளரும். ஆறு மாதத்தில் மரமாகிவிடும்.நான்கு மாதத்தில் பூ பூக்கும்.வீட்டில் வளர்க்கலாம். விதைகள் விழுந்த இடம் எல்லாம் செடி முளைக்கும். கிராமத்தில் வயல்களில் இந்த விதைகளை விதைத்து விடுவார்கள். இரண்டு மாதத்தில் நன்றாக வளர்ந்து விடும். அப்புறம் அதை அப்படியே மடக்கி உழுது விட்டு,நெல் நடவு செய்வார்கள்.நல்ல உரமாகவும் பயன்படும்

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு








இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது.

இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.

பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக் கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும்.

இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும்.


  • பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.



  • பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.




  • பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.



  • பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.



  • ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.



  • இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.



  • பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும்.



  • பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.



  • பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.



  • நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.



  • ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.



  • பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.



  • மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.



  • இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.



  • பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள்.



  • சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.



  • பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.



  • அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர்.



  • பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
  • உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.



வில்வம் பழங்கள்


திருநீற்று பச்சிலை

 திருநீற்றுப் பச்சிலை, துளசியின் குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும். பச்சிலை என்று குறிப்பிடப்படும் இத்தாவரத்தின் இலை, தண்டு, பூ என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மணமும், மருத்துவக் குணமும் கொண்டவை.

பொதுவாக இவ்வகை இனத்தாவரங்கள் வெப்ப மண்டலப் பகுதிகளின் வீணான இடங்கள், சாலையோரங்களில் தானாகவே வளரும் தன்மை கொண்டவை.

நஞ்சினை முறிக்க மாற்று மருந்தாகப் பயன்படுகிறது. கிராமப்புறங்களில் கை வைத்தியத்திற்கு இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது. ஜுரத்தைக் குறைத்து வியர்க்கச் செய்யும் பூச்சிகளை அகற்றும் கிருமி நாசினியாகும். நோயை ஆற்றும். கபத்தை வெளியேற்றும்.

புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இதன் இலைசாறைத் தடவலாம். அஜீரணத்தைப் போக்கும். முத்திரக்கல்லை நீக்கும். படர்தாமரை நோயைக் குணப்படுத்தும். இதிலிருந்து எடுக்கப்படும் தைலம் சரும நோய்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பச்சிலையை புண், பரு, பேன் இவைகளைப் போக்க தேய்த்துக் குளிக்கலாம். இதன் மணத்திற்காக எண்ணெய் முறைகளில் சேர்ப்பதுண்டு. பச்சிலை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி, சடாமாஞ்சில், வாய்விடங்கம், கசகசா, கார்போக அரிசி, சந்தனம், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு இவைகளைப் பொடித்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு எண்ணெயில் குழைத்துப் பூசி தலை முழுகினாலும், பொடியைத் தனியாக தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு, சொறி, கற்றாழை நாற்றம் போகும். உடல் சூடு தணியும்.

இலைச்சாறு பருக்கள், வடுக்கள் போன்றவற்றிலிருந்து சருமத்தைக் காக்கிறது. இதன் சாறுடன் வசம்பு சேர்த்து, அரைத்து சருமத்தில் தோன்றும் பருக்களுக்குப் போட்டால் விரைவில் குணம் தெரியும். புரையோடி சீழ் வைத்த பருக்களுக்கும், விஷப் பருக்களுக்கும் மூன்று வேளை தடவ பரு காய்ந்து உதிர்ந்து விடும்.

கண்களுக்கு இலையின் சாறு தடவ கண்கட்டி போன்ற கண் நோய்கள் குணமாகும். விதைகள் குளிர் பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுத்தப்படுகின்றன.


காக்கட்டான்( சங்கு புஷ்பம்)

இதன் இலை வேர் விதைகள் மருத்துவ பயன் மிக்கவை .

காக்கரட்டான் விதைகள்  மணம் உடையதாகவும் புளிப்புச்சுவையுடன்  இருக்கும்.
இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் நீக்குதல் , , பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல்.  நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போதுசங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.

சங்கு பூவின் இலைச்சாற்றைக் கொண்டு புடமிடதங்கம் பஸ்பமாகும்.
 நீண்ட  நாள்  கப நோய்களுக்கு காக்கரட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு   எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில்  நிவாரணம் கிடைக்கும்

காக்கட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த  நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீரக
நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும். .
மேலும் இந்த கொடியின்
 இலைகள் ஞாபக சக்தியை புத்திசாலித்தனத்தை   
வளர்க்கும் சக்தி கொண்டது  நரம்பு சம்பந்தமான குறைகளையும் போக்கும் .
சில பழங்குடிகளிடம் இதை கரு நீக்க பயன் செய்தாலும் உண்டு .
இதன் இலைச் சாறு வயறு உப்புசத்தை போக்கும் .
தொண்டை புண்ணை ஆற்றும் .

Saturday, 8 December 2012

காக்கட்டான்(சங்கு புஷ்பம்)

CLITORIA TERNATEA
(sangupuspam) (N.O. Papilionaceae)

Habit: Climber Parts
Used: Root, bark, seeds and leaves
Constituents: Root bark contains Tannin and Resins. Seeds contain
fixed Oil.

Action: Fresh root is Apparent and Diuretic. Seeds are powerful
Cathartic. Root bark is Demulcent, Diuretic and Laxative.

Uses : This is used to treat indigestion, constipation, and
arthritis and eye ailments. This is employed with advantage in cases
of ascetic, Enlargement of the abdominal viscera, sore throat, skin
diseases etc. This removes phlegm and the mucous in the throat
through purgation. They are useful in splenetic disorders, intestinal
worms, and neurosis of the thumb similar to cramp itching, sloughing
ulcers black and white Spots in the body etc., Roots relieves the
irritation of the bladder and urethra it is prescribed for gonorrhea,
diabetes and other urinary disorders. Ground into powder and it is
given for children in indigestion, fever and cough

வில்வம் பழம்

சிவன் கோவில்களில் பெரும்பாலும் காணப்படும்  வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம்.

வில்வம் பழம்


 வில்வ பழத்தில் பல சத்துக்கள் உள்ளன. அவை புரதச்சத்து, தாதுப்பொருள் சத்து, மாவுப்பொருள் சத்து, சுண்ணாம்பு சத்து, கொழுப்புச் சத்துக்கள் உண்டு. மேலும் வைட்டமின் ஈ சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் உள்ளன.

வில்வ பழத்தின் பயன்கள்: வில்வ பழத்திலிருந்து ஜாம், ஸ்குவாஷ், சர்பத், சிரப் ஆகியவைகளை தயாரிக்கலாம். கற்கண்டு, மிட்டாய் மற்றும் மிட்டாய்பானங்கள் தயாரிக்கலாம். இதன் குழம்பு வண்ணப் பொடிகளுடன் கலந்து படங்கள் வரைய பயன்படுகிறது. இதன் பழச்சதையை சோப்பு போலும் பயன்படுத்தலாம். பழத்தின் ஓட்டிலிருந்து ஒரு வகையான தைலம் தயாரிக்கலாம். இது வில்வ தைலம் எனப்படுகிறது.


இதன் விதைகளிலிருந்து வில்வ எண்ணெய் தயாரிக்கலாம். இதன் மரப்பட்டையிலிருந்து காகிதம் தயாரிக்கலாம். வில்வ பழத்தை சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். வில்வ பழச்சதைகள் தண்ணீரில் போட்டு சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இதனை ஜுஸ் செய்தும் சாப்பிடலாம்
.
வில்வ இலைகளிலிருந்து சாறு பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து சாப்பிட்டால் ஜலதோஷம், காய்ச்சல் நீங்கும். மேலும் வில்வ இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அதனை காய்ச்சி, வடிகட்டி தினந்தோறும் அரை டம்ளர் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மலச்சிக்கல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இதன் பழச்சதையை எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றோட்டம், வயிற்று கடுப்பு குணமாகும். இதன் சதையுடன் பசும்பால் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தல் கண் எரிச்சல், தலைச்சூடு தணிந்துவிடும். இதன் இலைகளை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், தலைவலி ஆகியவை நீங்கிவிடும். வில்வப் பழம் குடலுக்கு வலிமையை கொடுக்கும். ஜீரணம் ஆகிவிடும். இவை அனைத்தும் உள்ள இந்த மரத்தை நாம் வீடுகளில் வளர்த்து பயன்பெறலாம்.

நுரையீரல்தொடர்பாக ஏற்படும் நோய்களை வில்வம் குணப்படுத்துகிறது.  சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், மூச்சுவிட இயலாத தன்மை (ஆஸ்துமா) போன்றவற்றிற்கு வில்வம் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து இலைகளை மென்று உட்கொள்ள வேண்டும்.

இதயத்தைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துகிறது.  மனித உடலிலுள்ள ரத்தத்தைத் தூய்மை செய்கிறது. சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.  வயிற்றிலே  தோன்றும் அஜீரணக் கோளாறுகளை அகற்றுகிறது.  வாயுத் தொல்லையை விரைவில் அகற்றும் தன்மையை உடையது.  வில்வ இலைகளை மசிய அரைத்து,  மோருடன் கலந்து பருக வேண்டும்.

நூறு ஆண்டுகள் ஆன வில்வ மரத்தின் இலைகள் குஷ்டத்தைக் குணப்படுத்துகின்றன. தினமும் வெறும் வயிற்றில் கைப்பிடியளவு வில்வ இலைகளை 1 மண்டலம் (48 நாட்கள்)  தொடர்ந்து உட்கொண்டால் குஷ்டம் குணமாகும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

வில்வ வேரை 10 - 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர, தேவையில்லாத விந்து வெளியேற்றத்தைத் தடுத்து, விந்துவைப் பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும்
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத் திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரைமட்டும் அருந்தி னால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், வாத தோஷம் போகும்

அதிக அளவு புரதம் அதன் கனியில் உள்ளது .அதிகஅளவு சீத பேதி மட்டும் மல கழிவுக்கு வில்வகனி சிறந்த நிவாரிணி .

பாதி கனிந்த பழத்தை சதையை  நல்லெண்ணையில் ஒரு வாரம் ஊறவைத்து குளிக்கும் போது உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சரும நோய்,மற்றும் உடம்பு எரிதல் குணமாகும் .

சோகை நோய்க்கு அதன் காயை சதைபத்தை எடுத்து காயவைத்து அதை போடி செய்து , 10 கிராம் பொடிக்கு  50  கிராம் பசும் நே சேர்த்து நாள் ஒன்றிக்கு இருமறை ஒரு மண்டலம் உபயோகிக்க குணமாகும் .

ரத்த அழு த்தத்திர்க்கு இலையை சாறுபிழிந்து உபயோகிக்க குறையும் . வில்வ இலை காற்றை சுத்தமாக்கும் . வில்வம் பழத்தை தொடர்ந்து உபயோகிக்க சக்கரை வியாதி குணமாகும்

சிறியா நங்கை

சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.

கசப்பு மருந்து எனப்படும் சிறியாநங்கை, பெரியாநங்கை தாவரங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. இவை செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும் உண்டு.

விஷக்கடிக்கு மருந்து

சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள் அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் தாக்காது. தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.

நீரிழிவு நோய்க்கு மருந்து

இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகள் மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள்.

கல்லீரல் நோய்களை போக்கும்

காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளித்தொந்தரவினால் ஏற்பட்ட நோய்களை போக்கும். மலேரியாவிற்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
  

திருநீற்று பச்சிலை

OCIMUM BASILICUM
(Thiruneetrupachai) (N.O. Labiatae)

Habit: Shrub or herb Parts

used: Whole plant Constituents: Leaves contain an essential oil,
which contains new trepan. Action: Diaphoretic, Carminative, and
Stimulant. Seeds are Mucilaginous, Demulcent, Aphrodisiac and
Diuretic. Leaves are Fragrant and Aromatic. Juice of the plant is
Anthelmintic. Root is Febrifuge.

Uses: Flowers of this aromatic herb is white in color with Fragrant
smell. Juice of the leaves cures ringworm infection and other skin
Diseases. Leaf juice if rubbed reduces the pain in scorpion sting.
Leaf juice if taken along with lukewarm water cures vomiting. The
mixture of its leaves and sweet flag are ground and if applied
reduces the pimples. Juice of the leaves if taken relieves labor pain
and pain during Parturition. This also cures phlegmatic disorders and
vomiting. Juice of the leaves mixed with cow's milk if taken twice
daily for Seven days, cures venereal diseases. Seeds and flowers are
used as stimulant, diuretic and demulcent. Seeds If taken after
childbirth, removes the pain. Seed indecoction cures urinary
Diseases. Leaves are powdered and used as a snuff to eradicate the
maggots from the nose. This also cures drowsiness. Seeds are used to
cure piles and constipation. Sherbet made out of its seeds cures
dysentery, gleet and cough. Decoction of the leaves if irrigated to
the nose acts as parasitiside but produces anesthesia.



நறுமணம் தரும் சுகமான மூலிகை. ஜலதோஷம் ,மூக்கடைப்பு.சுவாசக் கோளாறு ஆகியவற்றுக்கு இலைகளை நுகர்ந்து பார்த்தால் சுகம் தரும்

மூலிகைகளின் அரசன் என்று அழைக்கப்படும் திருநீற்றுப்பச்சிலை தாவரம் துளசியைப் போல தெய்வீக தாவரம் என்று அழைக்கப்படுகிறத. இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் உள்ள நோய்களைப் போக்கும் அருமருந்தாக பயன்படுகின்றன.

உருத்திரட்சடை இதற்கு திருநீற்றுப் பச்சிலை, பச்சை சப்ஜா என வேறு பெயர்களும் உண்டு.

மணம் மிக்க தாவரமான திருநீற்றுப்பச்சிலையின் முழுத் தாவரமும் மருத்துவ குணம் கொண்டது. சாதாரணமாக சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இந்த மூலிகைக் தாவரம், வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும் ஜுரத்தை குறைக்கும் கிருமி நாசினியாகும்.

இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது. இது இந்தியா முழுவதும் காணப்படும் ஒருவகை செடியினமாகும். திருநீற்றுப் பச்சை சிலேஷ்சர்த்தி தன்னை
விரிநீற்றைப் போலாக்கு மெய்யே பெரிய சுரத்திரத்த வாந்தி சரமருசி நில்லா வுருத்திரச்ச டைக்கே யுரை---இது அகத்தியர் குணபாடம் இதன் இலை கற்பூரத்தின் தன்மை கொண்டது. 
வியர்வையை பெருக்கச் செய்யும். இலைச்சாறு வாந்தி சுரம் ஆகியவற்றைப் போக்கும்.

விதை
கர்ப்பிணிப் பெண்களுக்கு இதன் விதையை தக்க முறைப்படி மருந்து செய்து கொடுக்க தாய்க்கு நல்லது.

வேர் 
வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க வல்லது. இதன் வேரை இடித்து பொடித்து கஷாயம் செய்து காலை மாலை அருந்திவந்தால் வயிற்றில் பூச்சிகளை அழித்து வயிற்றுப் புண்களை ஆற்றும். சிறுநீர் பெருக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும் சிறுநீரகத்தை பலப்படுத்தி சிறுநீரை பெருக்கும். இதனால் உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது.
முகப்பரு உள்ளவர்கள் திருநீற்றுப் பச்சிலையை கசக்கி சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு நீங்கும்.

இதன் இலைச்சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டு வந்தால் காதுவலி, சீழ்பிடித்தல் நீங்கும்.

திருநீற்றுப் பச்சிலையின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து மூக்கில் உறிஞ்சுவதால் மூக்கில் உள்ள கிருமிகள் வெளியேறும்.
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து இரவில் கட்டியில் போட்டு வர கட்டிகள் உடையும்.

இலையை நுகர்ந்து தலையணை அடியில் வைத்துப் படுத்தால் தலைவலி போய், நன்கு தூக்கம் வரும்.

இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து பருகிவர, மார்புச்சளி, இருமல், மேல் சுவாசம், வயிற்று வாய்வுப் பிரச்னைகள் தீரும்.
இலையை வாட்டிப் பிழிந்து காதில் விட, காது நோய், காது மந்தம் தீரும்.
தாது உப்புக்களும், உயிர்சத்துக்களும்

திருநீற்றுப்பச்சிலையில் பீட்டாகரோட்டீன் மற்றும் ஏ உயிர்ச்சத்தும் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளை கொண்டுள்ள இந்த மூலிகையில் பொட்டாசியம், மாங்கனீசியம், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் காணப்படுகின்றன. இது ஆண்டிஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் கிருமிகளை கொல்கிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

இருமல் மருந்தாகும் இலைகள்

இதன் இலைகள் மணம் மிக்கவை. கக்குவான் இருமலுக்குப் பயன்படும். சாற்றினை மூக்கினுள் தாரையாக செலுத்தும் போது இருமல் கட்டுப்படுகிறது. தேனுடன் கலந்து சூடக்கப்பட்ட சாறு சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும். இது படர்தாமரையை குணப்படுத்தும்.

நஞ்சுக்கு மாற்று மருந்து

அஜீரணத்தைப் போக்கும். பிசுபிசுப்பு தன்மையுடைய இதன் இலைகள் சிறுநீர்ப்பை அலற்சி, மலச்சிக்கல், உள்மூலம், சிறுநீரகக் கோளாறு, மேகவெட்டை, கோனேரியா போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலையின் சாறானது வயிற்றுப்போக்கு, வலி, புண்கள், போன்றவற்றிர்குப் பயன்படும். பற்றுப்புண்கள், காயங்களுக்கு தடவ அவை எளிதில் குணமடையும்.

அஜீரணம் போக்கும் 
சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம்.

இந்த தாவரத்தின் மலரானது அஜீரணத்தைப் போக்கும் மூத்திரக் கடுப்பை நீக்கும் வேரானது காய்ச்சலைத் தணிக்கும். குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும்.

விஷப்பரு குணமடையும்

முகத்தில் தோன்றும் விஷத் தன்மை வாய்ந்த பருக்களுக்கு திருநீற்றுப்பச்சிலை அருமருந்து. திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு வைத்து அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேலை தடவி வரை பரு காய்ந்து கொட்டிவிடும். தோல் மென்மையடையும்.
இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து பருகிவர, மார்புச்சளி, இருமல், மேல் சுவாசம், வயிற்று வாய்வுப் பிரச்னைகள் தீரும்.
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து இரவில் கட்டியில் போட்டு வர கட்டிகள் உடையும்.

தூதுவளை

SOLANUM TRILOBATUM
(Thuthuvalai) (N.O. Solanaceae)

Habit: Climber Parts

used : Whole plant

Constituents: Leaves contain moisture, protein, minerals, and crude
fiber And other
Carbohydrates.

Action: Cardiac, Tonic, Carminative, Stimulant, Expectorant,
Nutritive, Diaphoretic
and Aphrodisiac

Uses: This is a kind of climber, which has thorns. The root And
leaves are bitter
and astringent. If taken as a vegetable, it relieves diseases of ear
due to phlegm, asthma, indigestion, spermatorrhoea etc. The leaves
are Roasted along with onion in gingerly oil. This is used to treat
difficulty in breathing. The dosage for the first three days is once
daily and again after three days continue the same dosage. The
treatment for tuberculosis with this is as follows. The leaves are
made into a paste with cow's butter, 10gms of mixture of long pepper,
celery and myrabalan. This paste is heated and 5 ml of the extract is
used daily for 40 days. The flower paste with gee if taken along with
curd acts as an aphrodisiac and improves mental power. Leaf is very
effective against indigestion, spermatorrhoea and fatigue. To treat
diseases of ear, ascetic, impaired digestion due to excessive heat,
the leaves are used along with pulses. If used as ear drops, the leaf
juices cures dullness of hearing, otorrhoea and other diseases of
ear. Dried and powdered fruit, if taken internally cures phlegmatic
disorders, rheumatism, constipation, gastric problems. The ripened
fruit cures chest congestion chest pain. This is an antidote to snake
poisons. The researchers are trying to make medicines from the leaves
and stem of this plant.