Showing posts with label ஆசை அறுமின்கள். Show all posts
Showing posts with label ஆசை அறுமின்கள். Show all posts

Saturday, 5 January 2013

அரைஞான் கயிறு



ஆண்குழந்தை பிறந்தவுடன் இடுப்பில் காட்டப்படும் கருப்பு கயிறு இது.அவன் வளர்ந்து வாழ்ந்து செத்து சுடுகாடு போகும்வரை இடுப்பில்தான் இருக்கும்.பிணத்தை அடக்கம் செய்யும்போது அல்லது எரிக்கும்போது அக்கயிறு கத்தரிக்கப்படும்.
என்னமோ தெரியவில்லை சில நாட்களாக என் இடுப்புக்கயிறு இடுப்பில் நிற்காமல் இறங்கி இறங்கி வந்து கொண்டிருந்தது..கயிறு தளர்ந்திருக்கும் என்று எண்ணி அவிழ்த்து இருக்க கட்டியும் பயன் இல்லை. தெருவில் நடக்கும் பொது கயிறாய் மேலே தூக்கி அதன் இடத்தில் நிலை நிறுத்த முயற்சிப்பது தர்ம சங்கடமாக இருந்தது.இரண்டு நாட்களுக்கு முன் கயிறு இடுப்பிலிருந்து இறங்கி பாதம் வரை வந்து விட்டது.யோசனை செய்தேன்.அரைஞான் கயிரை கழற்றி தூக்கி வீசி  விட்டேன். ஆகா இப்போது என்ன சுகமாக இருக்கிறது தெருவில் நடக்கும்போது.

இப்படித்தான் சில பழக்கங்களை கடந்த காலத்தில் தூக்கி வீசி இருக்கிறேன்.
அவை புகை,மது இன்னும் சில....

இதைதான் திருமூலர் இப்படி சொல்லி இருக்கிறாரோ?


ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்

ஆசை பட பட ஆய் வரும் துன்பம்

ஆசை விட விட ஆனந்தமாமே--திருமந்திரம்