இந்த ரோஜா செடியும் பரிணாம வளர்ச்சியும் அதன் முடிவும் படங்களாக ....
Sunday, 8 March 2015
பூவெல்லாம் கேட்டுப்பார்--ஒரு ரோஜா செடியின் கதை
இந்த ரோஜா செடியும் பரிணாம வளர்ச்சியும் அதன் முடிவும் படங்களாக ....
சப்போட்டா மரம்
வீட்டுத்தோட்டத்தில் சப்போட்டா மரத்தை எளிதாக வளர்க்கலாம். இதன் பழங்கள்
சுவையானது. அதிக சத்து நிறைந்தது. சரும வளர்ச்சியை பாதுகாக்கிறது. நம்
தோட்டத்தில் சப்போட்டா பழ மரங்களை வளர்ப்பதன் மூலம் நமக்கு தேவையான சத்தான
பழங்களை அன்றாடம் பறித்து சாப்பிடலாம். சப்போட்டா பழ மரம் வளர்ப்பு பற்றி
வேளாண்துறை அதிகாரிகள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது.நல்ல வடிகால்
வசதியான மண் ஏற்றது.ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது.
சப்போட்டா பழங்கள் ஜூலை – அக்டோபர் மாதத்தில் பயிரிட ஏற்றது
விதை & உரமிடல்
கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி,
உள்ளிட்ட பல ரகங்களை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். பயிரிடும் போது
1x1x1 மீட்டர் நீள அகல ஆழ குழிவெட்ட வேண்டும். அதில் 5:10:5 அளவுள்ள
சிங்கில் சூப்பர் பாஸ்பேட், வேப்பம்புண்ணாக்கு, நுண்ணியிரி கலந்து உரமிடல்
வேண்டும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். பின்னர்
சீரான இடைவெளியிடல தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒட்டுப் பகுதிகளின் கீழே
தழைத்துவரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
தரை மட்டத்தில் இருந்து சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல்
பார்த்துக்கொள்வது நல்லது. கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்க
வேண்டும்.சப்போட்டா மரத்திற்கு கவாத்து செய்தல் தேவை இல்லை.உயரமாக
வளரக்கூடிய ஒரு சில தண்டுகளை மட்டும் நீக்கிவிட வேண்டும்.அடர்த்தியான,
நிழல் விழும் கிளைகளையும் நீக்கிவிடவும்.
உரம், பூச்சிதாக்குதல்
சப்போட்டா பயிர் வருடத்திற்கு இரண்டு முறை பெரும்பான்மையாக
காய்க்கும்.ஏப்ரல் முதல் ஜூலை வரை ஒரு முறையும், செப்டம்பர் முதல் நவம்பர்
வரை ஓரளவு காய்க்கும். பேரிக் அமில தழை தெளிப்பானை ஜீன் மாதத்திற்கு இடை
இடையில் நான்கு முறை தெளித்தால் சப்போட்டா பழம் நன்கு காய்க்கும்.
சாப்போட்டாவில் பூச்சி தாக்குதலை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும். புழு
கால் களற்று மஞ்சள் நிறமாக காணப்படும். தாய்ப்பூச்சி பழுப்பு நிற கண்ணாடி
போன்ற இறக்கைகளுடன் காணப்படும். புழு பாதி பழுத்த பழங்களை தாக்கி,
மரத்திலிருந்து பழங்களை விழச்செய்யும். தாக்கிய பழங்களில் நீர் வடியும்.
பழத்தின் மேற்பகுதியில் பழுப்பு நிறத்தில் அழகிய திட்டுகள் காணப்படும்.
பாதிக்கப்பட்ட பழங்களை பறித்து அகற்றி விட வேண்டும். மரத்தைச் சுற்றி உழவு
செய்து பழ ஈயின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். ஒப்பியஸ் காட்பன்சேட்டஸ்
மற்றும் ஸ்பாலஞ்சியா பிலிப்பைன்ஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தி
புழு ஈக்களின் தாக்குதலை தடுக்கலாம்.
அறுவடை காலம்
சப்போட்டா பழத்தின் முதிர்ச்சியை அறிவது சிறிது கடினம். இதர பயிர்களைப்
போல் இதில் நிறமாற்றம் ஏற்படுவதில்லை.ஆயினும் பழத்தின் தோலில் உள்ள சிறிய
சிறிய கருநிறத்துகள்கள் மறைந்து, பழங்கள் சிறிது பளபளவென்றிருக்கும்.
பழத்தை நகத்தால் கீறிப்பார்த்தால், உள்ளே மித மஞ்சள் நிறம் தெரிய வேண்டும்.
பால் வடியக் கூடாது. பழத்தின் அடிப்பாகத்தில் உள்ள முள் போன்ற சிறிய நுனி,
எளிதில் பிரிந்துவரும். பழத்தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகும்.
Saturday, 14 February 2015
சுண்டைக்காய் செடி
சுண்டை (Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும். பொதுவாக 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. மூச்சுக் குழாய் நோய்கள்,வயிற்றுப் புழுக்கள், பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்புசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கசப்புத் தன்மை மிகுந்தளவில் உள்ளது. சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம்குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய்போன்றவைக் கட்டுப்படும். மேலும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது
பொதுவாக சுண்டைக்காயில் இருவகை உண்டு.
- காட்டுச் சுண்டை
- நாட்டுச் சுண்டை
காட்டுச் சுண்டை மலைக்காடுகளில் தானாக வளர்ந்து மிகுதியாகக் காணப்படுவது. நாட்டுச்சுண்டை வீட்டுத் தோட்டங்களிலும், கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும். காட்டுச்சுண்டை கசப்பாகவும், நாட்டுச் சுண்டை கசப்பு குறைந்தும் இருக்கும். எனினும் இவை இரண்டும் ஒரே தன்மையான மருத்துவப் பயன்களையே தர வல்லன.
சுண்டையின் இலைகள், வேர், காய் என முழுச்செடியும் மருத்துவ குணம் உடையது. இலைகள்குருதிப்பெருக்குக்கும், காய்கள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன.
சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது. சுண்டைக்காயோடு மிளகும்கறிவேப்பிலையும் சேர்த்து வடிசாறு (கஷாயம்) செய்து சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துவந்தால்மூலக்கிருமி, மலத்துவாரத்தில் உள்ள பூச்சிக்கடி முதலானவை நீங்கும்
Saturday, 15 November 2014
Saturday, 11 October 2014
பேரகத்தி பூ
பேரகத்தி பூ ( சீமை அகத்தி)
இந்த சீமை அகத்தி தமிழ் நாட்டில் தென்
மாவட்டத்தில் அதிகமாகஉள்ளது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ளஇடத்தில் நன்கு வளரும்.
இது ஆற்றுப்படுகைகளில் அதிக உயரமாக வளமுடன் வளரும்.இது ஆறு அடி முதல் 12 அடி வரை வளரக்கூடியது. இது ஒரு புதர் போன்ற
சிறு மரம். வெட்ட வெட்டதழைத்து வளரும் இந்தத் தாவரம் பூர்வீகம் மெக்சிகோ நாடு.
இதன் இலை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை 50 -80 செ.மீ. நீளம் உடையது.இது அமேசன் மழைக்
காடுகளில் அதிகமாகக்காணப்படும் மேலும் பெரு, பிரேசில் , பிரன்சுகயானா, கயானா, வெனிசுலா, கொலம்பியா, ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா,அமரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும். இது
அழகுச் செடியாகவும்வளக்கப்படுகிறது. இதன் பூக்கள் மெழுகுவத்தி வைத்தால்
போன்றுமஞ்சள் நிறமாக கொத்தாக அழகாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் இரவில்
மூடிக்கொள்ளும் வாகை இலைபோன்று. பூக்கள் உதுர்ந்து நீண்ட காய்கள் இருபக்கதுதிலும்அடுக்காகக்
காய்க்கும்.இதன் விதைகள்நீள் சதுர வடிவில் அமைந்திருக்கும். விதைகள் மூலம்
இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள்:
மருத்துவப்பயன்கள்:
சீமைஅகத்திச் செடியின் இலைகள் அதிகமாக மருத்துவத்திற்குப்
பயன்படுகிறது.தோல் வியாதிகளைக் குணப்படுத்துகின்றது. வண்டுகடி, படர்தாமரை, சொறிசிறங்கு, கற்பப்பை கோளாறுகள் பாக்டீரிய்,பூஞ்சல்களைக் கொல்லவும், இரத்த அழுத்தம் குறைவதைக் குணப்படுத்தவும்,வயிற்றுவலி, காய்ச்சல், ஆஸ்த்துமா, அல்சர், பாம்புக்கடி, சிறுநீர் எழிதாகக்கழிய, நுரையீரல் நோய்கள், இரத்த சோகை, மாதவிடாய் சம்பந்தமான நோய்கள், மேலும் மேக நோயான சிபிலிஸ் போன்றவைகளையும்
குணப்படுத்தும். இதன் இலையில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு,ஷேம்பு,முகப்பூச்சாகவும் பிலிப்பெயின்சில் பயன்படுத்துகிறார்கள்.
வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைபறித்து எலுமச்சஞ்சாறுடன் சேர்த்து நன்குஅரைத்து வண்டு கடிமீது காலை, மாலைதடவினால் விரைவில் குணமடையும்.
இதன் மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படிகசாயம் வைத்துக் கொடுக்க சிறு நீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.
சீமைஅகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊரவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும்.
படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அறைத்து அதற்கு சமனெடை தேங்காய்எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும்இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும்
வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைபறித்து எலுமச்சஞ்சாறுடன் சேர்த்து நன்குஅரைத்து வண்டு கடிமீது காலை, மாலைதடவினால் விரைவில் குணமடையும்.
இதன் மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படிகசாயம் வைத்துக் கொடுக்க சிறு நீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.
சீமைஅகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊரவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும்.
படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அறைத்து அதற்கு சமனெடை தேங்காய்எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும்இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும்
Tuesday, 19 August 2014
குருவிக்கூடு வீடியோக்கள்
******
வீட்டுத்தோட்டம். குருவிக் கூடு வீடியோ பகுதி இரண்டு
*********
வீட்டுத்தோட்டம். குருவிக் கூடு வீடியோ பகுதி மூன்று
**********
**********
வீட்டுத்தோட்டம். குருவிக் கூடு வீடியோ பகுதி ஐந்து
Tuesday, 12 August 2014
Subscribe to:
Comments (Atom)






















