Sunday, 23 March 2014

பெண்ணாய் பெற

எங்க ஊரு மதுரை. நான் சிறுவனாக இருக்கும்போது தெருவில் குழாயடியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் பெண்மணிகள் யாராவது குடத்தை தூக்கி இடுப்பில்வைப்பதர்க்கு உதவ சொல்லுவார்கள். நான் அப்படி தூக்கி விட்டவுடன் அவர்கள் அடிக்கடி சொல்லுவது என்னவென்றால் "உன் பொண்டாட்டி வெறும் பெண்ணாய் பெற " என்று சொல்லுவார்கள். எனக்கு இரண்டு பெண்கள் ஒரு பையன்.
வாழ்க வளமுடன்.

Tuesday, 11 March 2014

திருமந்திரம்

நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்

Tuesday, 28 January 2014

காலம்

1954--70 குழந்தை பருவம் முதல் S.S.L.C முடிக்கும் வரை, காலம் மெதுவாகப்போனது. 1970--80 கொஞ்சம் வேகமாகப்போனது,கல்லூரி,கல்யாணம், மூன்று பிள்ளைகள் ,குழந்தை வளர்ப்பு,விவசாயம்:  1980--2000 அரசுப்பணி சென்னை வாழ்க்கை படு வேகமாகப் போனது: 2000--2013 பிணி, பேரன் பேத்திகள்,பணி ஓய்வு,பென்ஷன் காலம் எப்படி போனது என்றே தெரியவில்லை.2014-மூப்பு,சாக்காடு.....

Thursday, 23 January 2014

வண்ண நிலவன்

முப்பது ஆண்டுகளுக்கு முன் நானும் வண்ண நிலவன்  அவர்களும் பஸ்சில் சென்று கொண்டு இருந்தோம்.அப்போது அவர் துக்ளக் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிசெய்து கொண்டிருந்தார்..அவரிடம் எஸ்தர் மற்றும் கடல்புரத்தில் படி த்ததாக சொன்னேன். மேலும் அடுத்ததாக என்ன வெளியிடப்போகிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் நாவல் சிறுகதைகள் போன்றவைகளை எழுதுவது எல்லாம் பைத்தியக்காரத்தனமோ என்று சிலசமயம் எனக்கு தோன்றுகிறது என்று சொன்னார்.
அதன் பிறகு எனக்கும் இலக்கிய ஆர்வம குறைந்து வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.

Monday, 23 December 2013

மந்தாரை பூ

 மந்தாரைஇலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச்  சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன. 

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை  காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது.  மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும்  இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். 

மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால்  வரும் பேதி நின்று உடல் நலம் பெறும். முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள்,  ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். 

மந்தாரை இலைகள் வாதநோய், கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதயநோய், படபடப்பு,  ஆகியவற்றை  குணப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. மேலும் வயிற்றுபோக்கு படுக்கையில் சிறுநீர்கழித்தல், அதிக பித்த நீரால் ஏற்படும் மலேரியா காய்ச்சல்,  பொடுகு, முடி உதிர்வதை குறைத்தல், மூலநோய் போன்ற அனைத்திற்கும் ஊமத்தையின் இலை பெரிதும் பயன்படுகிறது.