Monday, 23 December 2013

மந்தாரை பூ

 மந்தாரைஇலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச்  சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன. 

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை  காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது.  மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும்  இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். 

மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால்  வரும் பேதி நின்று உடல் நலம் பெறும். முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள்,  ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். 

மந்தாரை இலைகள் வாதநோய், கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதயநோய், படபடப்பு,  ஆகியவற்றை  குணப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. மேலும் வயிற்றுபோக்கு படுக்கையில் சிறுநீர்கழித்தல், அதிக பித்த நீரால் ஏற்படும் மலேரியா காய்ச்சல்,  பொடுகு, முடி உதிர்வதை குறைத்தல், மூலநோய் போன்ற அனைத்திற்கும் ஊமத்தையின் இலை பெரிதும் பயன்படுகிறது.    

Friday, 20 December 2013

சாதி

சாதி என்பது இரத்தவகை போன்றது.மாற்றவும் முடியாது ஒழிக்கவும் முடியாது.அது ஒருபக்கம் இருந்துவிட்டு போகட்டும்.வயிற்றில் மலம இருக்கிறதே என்று வருத்தப்பட்டுக்கொண்டா இருக்கிறோம்?

Friday, 6 December 2013

சின்னப்பெருமாயி

நான் சம்மந்தம் பண்ணின ஊருல சின்னப்பெருமாயி என்ற இளம்பெண் இருந்தாள். அவள் பேரழகி.அள்ளிமுடிந்து கொண்டை போட்டு காதுல சவுடியும் தொங்கப்போட்டு இருப்பா.பொண்ணு கேட்டு வரும் இளந்தாரிப்பயல்களை சொட்டை சொல்லி வேணாம்னு சொல்லிருவா.காதல் கீதல் எதிலும் சிக்க அந்த ஏரியாவில அம்சமான மாப்பிள்ளை இல்ல.நாட்கள் கடந்தன. கிணத்து மண்னு அள்ள கூலி வேலைக்கு போனவள் படிக்கட்டில் இருந்து தவறி கிணத்துக்குள்ள விழுதுட்டா. மூஞ்சி மொகரையில அடிபட்டு ஆஸ்பத்திரியில தையல் போட்டு அவ முகமே மாறிப்போச்சு.கிழவி ஆன பின்னாலும் சின்னப்பெருமாயி கன்னியாகவே இருக்குறா.

Friday, 11 October 2013

சிவலிங்கம்

சிவலிங்கம் என்பது என் சிந்தனைப்படி அது விண்வெளியில் தவழும் ஒரு கேலக்சி(galaxy) ஆகும்.ஆவுடை என்று சொல்லப்படுவது சுழன்று வரும் பால் வெளி மண்டலங்கள் ஆகும். நடுவில் இருக்கும் லிங்கம் என்பது black hole எனறு சொல்லப்படும் cosmic pillar அதாவது கரும் புள்ளி. பூமியும் ஒரு galaxy ல் அமைத்துள்ளது. இதனை நம் முன்னோர்கள் தமது ஞான திருஷ்டியில் உணர்ந்து லிங்கத்தின் வடிவத்தினை தீர்மானித்துள்ளார்கள்.


Namasivayam Muthu's photo.

Thursday, 10 October 2013

கோலம்


கோலங்களில் பிரபஞ்ச ரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன.கோலம போடுபவர்களுக்கு இது தெரியாது.வீடு 
வாசல் இல்லாதவர்கள் எங்கே போடுவார்கள்? படிப படியாக சின்ன சின்ன கோலங்களை கவனித்து பார்த்து ஆழ்ந்து சிந்தனை செய்தால் உள்மனம் பலவித வானவியல் விளக்கங்களை சொல்லும்.முயற்சி திருவினை ஆக்கும். கோலம்போடுவதால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வது கோலம போடும் கலையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்ற காரணத்துக்குத்தான். வாழ்க வளமுடன்