Thursday, 24 September 2015

மனோன்மணியம் நாடகத்தில்

சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய  மனோன்மணியம் நாடகத்தில்  வரும் சுந்தர முனிவர்   அரசன் மகள்  திருமணம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு  காரணமாக இப்படி கூறுகிறார் "" குழவிப் பருவம் நழுவும் காலை  களிமிகு  கன்னியர்  உளமும்  வாக்கும்  புளியம் பழமும்  தோடும் போலாம் "
 ஆகா . என்ன அருமையாக  சொல்லி இருக்கிறார் . கல்லூரி கால  வசந்த நினைவுகள்.

மனோன்மணீயத்தில் மற்றும்   ஒரு காட்சி:

நடராஜன் என்பவன்  குடிலன் (மந்திரி) மகள்  வாணியைக்  காதலிப்பான்

இது பிடிக்காத சகடர் என்பான்  அரசன்  ஜீவகன்  முன்பாக  நடராஜனைப்  

பற்றி பிவருமாறு சொல்லுவான்

காவலா ! அவனைப் போலயான் கண்டிலன்
சுத்தமே பித்தன். சொல்லுக் கடங்கான்.
தனியே யுரைப்பன். தனியே சிரிப்பன்.
எங்கெனு மொருபூ இலைகனி யகப்படில்
அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியிற் றலைதடு மாறுவன்.

பரற்கலு மவனுக் ககப்படாத் திரவியம்
ஆயிரந் தடவை யாயினு நோக்குவன்.
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?

என்பான். இக்காட்சியும் வரிகளும்  மனதில் நன்கு பதிந்து விட்டன. சகடரின்  கூற்று  நினைத்து நினைத்து  நகைப்புக்குரியது.

புறநானுற்றுப் போர்ப்பறை

கல்லூரிக்கால  நினைவுகள்
தமிழ் நாட்டு அரசர்கள் தாங்களுக்குள் சண்டையிடுவதை வழக்கமாகக் கொடிருந்தனனர். தமிழர்களின் வீரம் குறித்துப் புலவர்களால் பாடப்பட்ட பாடல்களே புற நாநூறு எனப்படுகிறது . அக்காலத்தில் அரசர்கள் படை எடுக்கும் முன் எதிரி நாட்டு அரசர்களுக்கு போர் தொடுக்கப் போவதை முன்னரே அறிவிப்பார்கள் . அதைத்தொடர்ந்து எதிரி நாட்டு மக்களுக்கும் அது குறித்து இவ்வாறு முன் அறிவிப்பு செய்வார்கள்.



ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி


Tuesday, 15 September 2015

பவளமல்லி மரம், பூக்கள்

பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் தென் கீழ் ஆசிய நாடு.

தாய்லந்து நாட்டில் காஞ்சனபுரி மாநிலத்திலும் காணப்பட்டது. இது இந்தியா முழுதும் வளரக்கூடியது.வீட்டுத் தோட்டங்களிலும் நந்த வனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இந்த மரம் வழமான மண்ணில் நன்கு வளரும்..இதற்கு சிறிது வெய்யிலும் நிழலும் தேவைப்படும். 10 முதல் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. நீர் தேங்காத இடத்தில் நன்கு வளரும். இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் கூரான முனைகளையுடையது. எதிர் அடுக்கில் அமைந்தருக்கும். இலைகள் சொரசொரப்பாக இருக்கும் .இலைகள் தளவாடங்கள் மெருகேற்றப் பயன்படும். பூக்கள் பவழ நிறம் பட்டு வகைத் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும். கிளை நுனையில் பூக்கும். பூக்கள் பவழக் காம்பும், வெண்நிறமும் மல்லிகைப்பூப் போல்  அமைந்திருக்கும், நறுமணம் உடையது. பூக்கள் 5 – 7 இதழ்களையுடையது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும். இந்தப் பூக்கள் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிர்ந்து விடும். இந்த மரம் பற்றியும் பூக்கள் பற்றியும் புராணங்களில் இரண்டு கதைகள் சொல்வார்கள். இதன் காய்கள் தட்டையாக வட்ட வடிவில் காணப்படும். இரண்டு விதைகள் இருக்கும்.இந்த மரம் ஆண் மரம் தான். தன்மகரந்தச் சேர்க்கையால் காய்கள் விடும். இந்த மரம் தலவிருட்சமாகக் கருதப் படும். சிவத்தலங்களில் காணலாம். கட்டிங்மூலம் தான் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :– ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும்.

இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம்.

இம்மர இலையைச் சுடுநீரில் போட்டு நன்றாய் ஊரவைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை அருந்து வர, முதுகுவலி, காச்சல் போகும்.

வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், இதன் இலைகளை 200 கிராம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான அனலிலிட்டு வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காச்சி, இருதய வலுவற்ற குழந்தைகளுக்கும், இரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கும் அரை அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை நாளைக்கு இரு வேளை கொடுக்கு, குணம் பெறலாம்.

Thursday, 13 August 2015

ஆத்ம சாந்தி

ஆன்மா

இறந்து  போனவர்களுடைய  ஆன்மாவை  யாராலும்  எவ்வகையிலும் சாந்திப் படுத்த  முடியாது

Tuesday, 11 August 2015

#பிள்ளையார் #கணபதி #PILLAIYAAR #GANAPATHY

#பிள்ளையார்என்பது பூமிதத்துவம்

மண், ஆசை ,ஈர்ப்பு. உயிர் இருக்கும்வரை உடலை பற்றிக்கொண்டிருப்பார். உயிர் நீங்கியவுடன் உடலைத் தின்றுவிடுவார்.

He is an ALIEN / Example = #Narasimmar #Varaahi #Pillaiyaar #Hanuman #Kaamadenu #Nanthi #Jadaayu

மனித முகமல்லாத மாற்று முகங்களை கொண்ட புராண மாந்தர்கள் யாவரும் = #வேற்றுகிரகவாசிகளே 

உதாரணம் #நரசிம்மர்  #வராஹி #பிள்ளையார் #அனுமன் #காமதேனு  #நந்தி #ஜடாயு 

Sunday, 19 July 2015

தைராய்டு பிரச்சனை

நெற்றியில் விபூதி வைத்துவிட்டு விரலில் மீதம்உள்ள விபூதியை கழுத்தில் தடவும் வழக்கம் உள்ளவர்களுக்கு  தைராய்டு பிரச்சனை  இருக்காது என்று எனக்கு தோன்றுகிறது.. அதாவது தெரிந்தோ தெரியாமலோ
ஸெல்ப் ஹீலிங் ( self healing) முறையில் கழுத்துப்பகுதியில் உள்ள விசுக்தி சக்கரத்தினை activate செய்வது ஒரு காரணமாக இருக்கலாம்

Sunday, 5 July 2015

#கனவில்அம்மாஅப்பா

எனக்கு 12 வயது  ஆகும்போது அம்மா  இறந்துவிட்டார்கள்.
அப்போது  அம்மாவுக்கு 43  வயது. அம்மா இறந்த பிறகு அடிக்கடி  கனவில் வருவார்கள். கனவில் நான் அம்மாவிடம் கேட்கும்  கேள்வி  நீதான்  செத்துப்போய்ட்டியே  அப்புறம் எப்படி அம்மா  உசிரோடு  இருக்கீங்க  என்றுதான் கேட்ப்பேன். அம்மா  அதற்கு  "நான் சாகவில்லை"  என்றுதான் பதில்  சொல்லுவார்கள்.
சுமார் 25  ஆண்டுகள்  கனவில் அம்மா வந்தார்கள் . அப்புறம் வரவில்லை . எந்தந்தையிடம்  அம்மா கனவில்  வருவதில்லையே ஏன்? என்று கேட்டேன் . அதற்கு  அவர் "அம்மா  ஆவி உலகத்திலிருந்து  மேல் உலகம் சென்றிருக்கும்" என்று சொன்னார்கள். சில ஆண்டுகள்  கழித்து அப்பாவும்  இறந்துவிட்டார்கள்.

பிறகு அப்பா  மட்டும்  அடிக்கடி கனவில்  வருவார் அவரிடமும் அம்மாவிடம் கேட்ட  கேள்விதான் கனவிலும் கேட்டேன். அப்பாவும் தான் சாகவில்லை என்றுதான்  பதில் சொல்லுவார் இன்னும் அப்பா கனவில் வந்து கொண்டுதான் இருக்கிறார்
அம்மா இறந்து 49  ஆண்டுகள்  முடிந்துவிட்டன.
நேற்றைய கனவில் 25 ஆண்டுகள்  கழித்து அம்மா வந்தார்கள். ஆனால் சற்று முதிய கோலத்தில்  இருந்தார்கள். அம்மாவிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். என்ன பேசினேன் என்பது மறந்து விட்டது.கனவில் அம்மா தனக்கு வயது 92  என்று சொன்னார்கள். அதன் பின் ஒரு சிறிய 'ஈ' போல உருமாறி பறந்து  சென்று ஒரு புள்ளியாகி  மறைந்துவிட்டர்கள். நான் திகைத்து நிற்கையில்  என் தந்தையார்  கனவில் என்னிடம் வந்தார். அம்மாவிடம்  ரெம்ப நேரம் பேசினாயா? என்று கேட்டார். அத்துடன் கனவு கலைந்தது. காலை  எழுந்தவுடன்  அம்மாவின் தற்போதய  வயது என்ன என்பதை  கணக்குப் போட்டு பார்த்தேன்  அம்மா கனவில்  சொல்லியபடி 92.