Monday, 27 April 2015

#கண்ணீர் #TearsRollingDown

#கண்ணீர்

அம்மா செத்தபோதும் வரவில்லை, அப்பா இறந்தபோதும் வரவில்லை ,உடன்பிறந்த மூன்று சகோதரிகள் இறந்தபோதும் வரவில்லை,,சகோதரன் இறந்தபோதும் வரவில்லை .மனைவி நோயுற்று அவதிப்படும்போது மட்டும் கண்களின் ஓரத்தில்  வந்து எட்டிப்பார்க்கிறதே ? அதுவும் கீழே விழுவதில்லை.

Thursday, 23 April 2015

#பரஞ்சோதிபாபாவடபழனிசென்னை. #PARANJOTHIBAABAChennai



பரஞ்சோதி பாபா,வடபழனி,சென்னை.

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது. சென்னை மெஜஸ்டிக் ஸ்டூடியோவின் முன்னாள் அதிபர். தொழில் நஷ்டம் மற்றும் காலில் உண்டான புண் காரணமாக குடும்பத்தினரால் கைவிடப்பட்டார்.வடபழனி கோவில் வாசலில் வெகுகாலம் இருந்தார்.
அவர் ஒரு மகான் என்று கருதி ஒரு சிலர் வந்து அவரை சந்தித்து ஆசி பெற்று சென்றனர். அன்பர ஒருவரின் தயவால் வடபழனி கோவில் தெருவில் ஒரு சிறிய வீட்டில் கடைசிக்காலத்தில் வசித்தார். கடந்த 6-2-2008 ல் அவரை சென்று சந்தித்தேன். சில புகைப்படங்களையும் சிறிய வீடியோவும் எடுத்தேன்.
அவருக்கு வயது 85 என்று சொன்னார்கள்.
அவரை பார்க்க வருபவர்கள் அவருக்கு bread ம் பணமும் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் ஐயா என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.அப்போது அவர் என்னிடம் பேசினார்.வீட்டுக்கு போவதற்கு முன் பக்கத்து கடையில் நாலு வடையும் tea ம் சாப்பிட்டுவிட்டு போங்க என்று சொன்னார். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. -----மு. நமசிவாயம்.




************






Sunday, 19 April 2015

#தம்மண்ணசெட்டியார் #ThammnaChettiyar

#தம்மண்ணசெட்டியார்
சுமார்  90  வயது முதியவர். ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்.
ஒரு அன்பர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திப்பதற்காக என்னை அழைத்து சென்றார். அவர் வீடு பெரிய வீடு. வீட்டில் மகன் மகள், பேரன் பேத்திகள்  என அமர்க்களமாக இருந்தது . அவருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் எழுதிய நூல்களுக்கு நடுவே அமர்ந்திருந்தார். அவர் ஆரம்ப களத்தில் சிறு வியாபாரம் செய்து வந்ததாகவும்  வியாபாரம் நொடித்துப்போய் விட்டதால் பழைய நூல்களை வாசிக்கத்தொடங்கியதாகவும்  சொன்னார். பிறகு தானே சிறு சிறு நூல்கள் எழுதி பல  தலைப்புகளில் வெளியிட்டு வருவதாகவும் சொன்னார். எனக்கும் சில நூல் கள் கொடுத்து படிக்கச்சொன்னார்.
நான் அவரிடம்  #திருமந்திரப் பாடல்கள் சிலவற்றுக்கு வரைந்த படங்கள் ( Now it is to be published #CosmicSecretsAjourneyWithMysticTirumular =  #https://www.tirumular.com/index.php/news/category/exhibitions ) அடங்கிய நோட்டுப் புத்தகத்தை காட்டினேன். அதில் இருந்த படங்களில் சில வற்றுக்கு ஈர்ப்பு சக்தி உள்ளதாகச் சொன்னார். மேலும் நான் பணி  புரியும் நூலகத்துக்கு வருவதாகவும் சொன்னார்

பிறகு இரண்டு முறை என் அலுவலகம் வந்து அந்த தள்ளாத வயதிலும் என்னை சந்தித்து பேசினார். ஒரு முறை என்னை தொலை பேசியில் அழைத்து தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னார். ஏதோ காரணங்களினால் நான் உடனே போகவில்லை . கொஞ்ச நாள் கழித்து அவரை தொலை பேசியில் அழைத்த பொது அவரது மகன் தம்மண்ண செட்டியார் மறைந்த விஷயத்தை சொன்னார்.
மனசுக்கு  கஷ்டமாக  இருந்தது.

தம்மண்ண செட்டியார் எழுதிய நூல்களின்  பட்டியலை கூகுளில் காணலாம்
அதில் முக்கியமானது = #காதல்+காமம்=கடவுள்  


Sunday, 8 March 2015

பூவெல்லாம் கேட்டுப்பார்--ஒரு ரோஜா செடியின் கதை

இந்த ரோஜாசெடி  சுமார் பத்து அடி உயரம் வளர்ந்திருந்தது.ஒரு சிறிய தொட்டியில் இரண்டு ஆண்டுகாலம் வைத்திருந்தோம். பிறகு புது வீடு கட்டி வந்தபின் தரையில் வைத்து வளர்த்து வந்தோம் .அதன் பிறகு செடி உயரமாக வளர ஆரம்பித்தது .பூக்களும் பூக்கத்துவங்கின.ஆறு ஆண்டுகாலம் உயிர் வாழ்ந்தது. இத்தனைக்கும் அதற்கு தனி கவனிப்பு ஏதும் செய்யவில்லை. ஆறு ஆண்டுகள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்து பட்டுப்போயவிட்டது.இதற்கிடையில் எவ்வளவோ  புதிய ரோஜா செடிகள்  நட்டு வைத்தும் அவை எதுவும் இதுபோல் வளரவில்லை. நான் வேறு எங்கும் இது போல் வளர்ந்த செடி எதுவும் பார்த்ததில்லை . ரோஜா செடி பொதுவாக இப்படி வளருமா? எத்தனை ஆண்டுகள்  உயிர் வாழும்?

இந்த ரோஜா செடியும்  பரிணாம வளர்ச்சியும்  அதன் முடிவும்  படங்களாக ....

































சப்போட்டா மரம்

  வீட்டுத்தோட்டத்தில் சப்போட்டா மரத்தை எளிதாக வளர்க்கலாம். இதன் பழங்கள் சுவையானது. அதிக சத்து நிறைந்தது. சரும வளர்ச்சியை பாதுகாக்கிறது. நம் தோட்டத்தில் சப்போட்டா பழ மரங்களை வளர்ப்பதன் மூலம் நமக்கு தேவையான சத்தான பழங்களை அன்றாடம் பறித்து சாப்பிடலாம். சப்போட்டா பழ மரம் வளர்ப்பு பற்றி வேளாண்துறை அதிகாரிகள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது.நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது.ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது. சப்போட்டா பழங்கள் ஜூலை – அக்டோபர் மாதத்தில் பயிரிட ஏற்றது விதை & உரமிடல் கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, உள்ளிட்ட பல ரகங்களை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். பயிரிடும் போது 1x1x1 மீட்டர் நீள அகல ஆழ குழிவெட்ட வேண்டும். அதில் 5:10:5 அளவுள்ள சிங்கில் சூப்பர் பாஸ்பேட், வேப்பம்புண்ணாக்கு, நுண்ணியிரி கலந்து உரமிடல் வேண்டும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். பின்னர் சீரான இடைவெளியிடல தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்துவரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். தரை மட்டத்தில் இருந்து சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக்கொள்வது நல்லது. கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்க வேண்டும்.சப்போட்டா மரத்திற்கு கவாத்து செய்தல் தேவை இல்லை.உயரமாக வளரக்கூடிய ஒரு சில தண்டுகளை மட்டும் நீக்கிவிட வேண்டும்.அடர்த்தியான, நிழல் விழும் கிளைகளையும் நீக்கிவிடவும். உரம், பூச்சிதாக்குதல் சப்போட்டா பயிர் வருடத்திற்கு இரண்டு முறை பெரும்பான்மையாக காய்க்கும்.ஏப்ரல் முதல் ஜூலை வரை ஒரு முறையும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஓரளவு காய்க்கும். பேரிக் அமில தழை தெளிப்பானை ஜீன் மாதத்திற்கு இடை இடையில் நான்கு முறை தெளித்தால் சப்போட்டா பழம் நன்கு காய்க்கும். சாப்போட்டாவில் பூச்சி தாக்குதலை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும். புழு கால் களற்று மஞ்சள் நிறமாக காணப்படும். தாய்ப்பூச்சி பழுப்பு நிற கண்ணாடி போன்ற இறக்கைகளுடன் காணப்படும். புழு பாதி பழுத்த பழங்களை தாக்கி, மரத்திலிருந்து பழங்களை விழச்செய்யும். தாக்கிய பழங்களில் நீர் வடியும். பழத்தின் மேற்பகுதியில் பழுப்பு நிறத்தில் அழகிய திட்டுகள் காணப்படும். பாதிக்கப்பட்ட பழங்களை பறித்து அகற்றி விட வேண்டும். மரத்தைச் சுற்றி உழவு செய்து பழ ஈயின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். ஒப்பியஸ் காட்பன்சேட்டஸ் மற்றும் ஸ்பாலஞ்சியா பிலிப்பைன்ஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தி புழு ஈக்களின் தாக்குதலை தடுக்கலாம். அறுவடை காலம் சப்போட்டா பழத்தின் முதிர்ச்சியை அறிவது சிறிது கடினம். இதர பயிர்களைப் போல் இதில் நிறமாற்றம் ஏற்படுவதில்லை.ஆயினும் பழத்தின் தோலில் உள்ள சிறிய சிறிய கருநிறத்துகள்கள் மறைந்து, பழங்கள் சிறிது பளபளவென்றிருக்கும். பழத்தை நகத்தால் கீறிப்பார்த்தால், உள்ளே மித மஞ்சள் நிறம் தெரிய வேண்டும். பால் வடியக் கூடாது. பழத்தின் அடிப்பாகத்தில் உள்ள முள் போன்ற சிறிய நுனி, எளிதில் பிரிந்துவரும். பழத்தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகும்.

Saturday, 14 February 2015

சுண்டைக்காய் செடி

சுண்டை (Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும். பொதுவாக 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. மூச்சுக் குழாய் நோய்கள்,வயிற்றுப் புழுக்கள்பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும்வத்தல் குழம்புசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கசப்புத் தன்மை மிகுந்தளவில் உள்ளது. சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம்குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய்போன்றவைக் கட்டுப்படும். மேலும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது

பொதுவாக சுண்டைக்காயில் இருவகை உண்டு.
  1. காட்டுச் சுண்டை
  2. நாட்டுச் சுண்டை
காட்டுச் சுண்டை மலைக்காடுகளில் தானாக வளர்ந்து மிகுதியாகக் காணப்படுவது. நாட்டுச்சுண்டை வீட்டுத் தோட்டங்களிலும், கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும். காட்டுச்சுண்டை கசப்பாகவும், நாட்டுச் சுண்டை கசப்பு குறைந்தும் இருக்கும். எனினும் இவை இரண்டும் ஒரே தன்மையான மருத்துவப் பயன்களையே தர வல்லன.
சுண்டையின் இலைகள், வேர், காய் என முழுச்செடியும் மருத்துவ குணம் உடையது. இலைகள்குருதிப்பெருக்குக்கும், காய்கள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன.
சுண்டையில் புரதம்கல்சியம்இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல்அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது. சுண்டைக்காயோடு மிளகும்கறிவேப்பிலையும் சேர்த்து வடிசாறு (கஷாயம்) செய்து சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துவந்தால்மூலக்கிருமி, மலத்துவாரத்தில் உள்ள பூச்சிக்கடி முதலானவை நீங்கும்

Saturday, 15 November 2014

#விருமாண்டிச்சாமிகருமாத்தூர்உசிலம்பட்டிமதுரை #VIRUMAANDI

விருமாண்டிச்சாமி
1969--1979 வரை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் என்ற கிராமத்தில் வசித்தேன். நான் சென்னையில் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வந்தாலும் இன்றும் அந்த ஊரில் வசிப்பது போல் நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.