Thursday, 19 June 2014

சிரிப்பு

சிரிப்பது எனக்கு ரெம்ப பிடிக்கும்.நண்பர்களுடன் சேர்ந்து சிரிப்பது மறக்க முடியாத ஒன்று.ஆனாலும் மனசுக்குள் ஒரு பயம் இருக்கும்.சிரிக்கும்போது அவ்வளவாக சத்தம் வராது.அது நமட்டு சிரிப்பில் ஆரம்பிக்கும்.என்னுடன் சேர்ந்து சிரிப்பவரைப்பார்க்கும்போது சிரிப்பு மேலும் அதிகரிக்கும்.உடல் வயிறு,முதுகு எல்லாம் குலுங்கும்.விலாவில் பிடித்துக்கொள்ளும். சிலசமயம் சிரித்து சிரித்து உயிர் போய்விடுமோ என்று பயமாக இருக்கும்..சிரிப்பு நின்ற பிறகும் கொஞ்ச நேரம் முதுகு வலிக்கும்.

Monday, 16 June 2014

சாவு

சாவதற்குள் ஒருமுறை திருமந்திரம் படித்துவிட்டு சாகுங்கள். புரியாத பாடல்களை விட்டுவிடுங்கள் .உங்களுக்கான பாடல் உங்களுக்கு புரியும்

Friday, 2 May 2014

அன்பே சிவம்

அன்பே சிவம்.நமக்கு தெரியாத பிரபஞ்ச சக்திகள் பூமியின் மீது அன்பு கொண்டிருப்பதால்தான் பூமி இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது

ஜீவகாருண்யம்

பக்குவப்பட்ட ஞானிகள் உயிர் உள்ள தாவரங்களை, காய் கனிபோன்றவைகளை புசிக்க மாட்டார்கள். மரங்களிலிருந்து உலர்ந்து உதிர்ந்த காய்ந்த இலை களை மட்டுமே புசிப்பார்கள். சதா சர்வகாலமும் தியானத்தில் இருப்பார்கள். பூச்சிகள் கடித்து உடலில் புண் உண்டானாலும் அதற்கு மருந்திட மாட்டார்கள்.புண்களில் புழுக்கள் உண்டாகி அவை குடைவதைக்கண்டு வருந்தமாட்டர்கள்.புழுக்கள் ஏதேனும் புண்களில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டாலும் அவைகளைப் பொருக்கி எடுத்து புண்களில் விட்டு அவை குடைவதைக்கண்டு ஆனந்தம் அடைவார்கள். எங்கோ படித்தது.

 மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அவைகளை புசிக்காமளிருத்தல் ஒரு வறட்டு ஜீவகாருண்யம் என்றால் தாவரங்களையும் காய் கனிகளையும் புசிக்காது புழுக்கள் புண்களில் குடைவதைக் கண்டு இன்பம் அடைதல் என்பது ஒரு முரட்டு ஜீவகாருண்யம்தான்

Wednesday, 30 April 2014

ஆன்மா

ஆன்மா
.ஆன்மா இருக்குமிடம் உடம்பாகிய ஆலயத்தினுள்தான்.உடம்பினுள் உயிர்,உயிருக்குள் மனம்,மனத்துள் அறிவு,அறிவினுள்.ஆன்மா உள்ளது.அதன் பொறுப்பு ஒரு பார்வையாளனாக ஒடுங்கி இருப்பதுதான்.உடல் உயிர் மனம் ஆகியவற்றின் வினைப்பதிவுகளை பிரபஞ்சப் பதிவேட்டில் பதிவு செய்வது மட்டுமே ஆன்மாவின் பணி.உடல் இயக்கம் நின்றவுடன் ஆன்மாவும் அகன்றுவிடும். ஆன்மாவின் வடிவம் ய .

Tuesday, 29 April 2014

மரபணு

பல மிருகங்களின் மரபணுக்களின் கலவைதான் மனிதனின் மரபணு.சிலரை கூர்ந்து கவனித்தால் மிருகங்களின் சாயல் நன்றாகவே தெரியும்

வினை

பாவமும் புண்ணியமும் தனித்தனி அல்ல.இரண்டுக்கும் பொதுவான பெயர் வினை.வினைகள் யாவும் பதிவு செய்யப்படுகின்றன.அவரவர் வினைகளை அவரவர்களோ அல்லது சந்ததியினரோ அறுவடை செய்யவேண்டும்