அன்பே சிவம்.நமக்கு தெரியாத பிரபஞ்ச சக்திகள் பூமியின் மீது அன்பு கொண்டிருப்பதால்தான் பூமி இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது
Friday, 2 May 2014
ஜீவகாருண்யம்
பக்குவப்பட்ட
ஞானிகள் உயிர் உள்ள தாவரங்களை, காய் கனிபோன்றவைகளை புசிக்க மாட்டார்கள்.
மரங்களிலிருந்து உலர்ந்து உதிர்ந்த காய்ந்த இலை களை மட்டுமே புசிப்பார்கள்.
சதா சர்வகாலமும் தியானத்தில் இருப்பார்கள். பூச்சிகள் கடித்து உடலில் புண்
உண்டானாலும் அதற்கு மருந்திட மாட்டார்கள்.புண்களில் புழுக்கள் உண்டாகி அவை
குடைவதைக்கண்டு வருந்தமாட்டர்கள்.புழுக்கள் ஏதேனும் புண்களில் இருந்து
தவறி கீழே விழுந்துவிட்டாலும் அவைகளைப் பொருக்கி எடுத்து புண்களில் விட்டு
அவை குடைவதைக்கண்டு ஆனந்தம் அடைவார்கள். எங்கோ படித்தது.
மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அவைகளை புசிக்காமளிருத்தல் ஒரு வறட்டு ஜீவகாருண்யம் என்றால் தாவரங்களையும் காய் கனிகளையும் புசிக்காது புழுக்கள் புண்களில் குடைவதைக் கண்டு இன்பம் அடைதல் என்பது ஒரு முரட்டு ஜீவகாருண்யம்தான்

Wednesday, 30 April 2014
ஆன்மா
ஆன்மா
.ஆன்மா இருக்குமிடம் உடம்பாகிய ஆலயத்தினுள்தான்.உடம்பினுள் உயிர்,உயிருக்குள் மனம்,மனத்துள் அறிவு,அறிவினுள்.ஆன்மா உள்ளது.அதன் பொறுப்பு ஒரு பார்வையாளனாக ஒடுங்கி இருப்பதுதான்.உடல் உயிர் மனம் ஆகியவற்றின் வினைப்பதிவுகளை பிரபஞ்சப் பதிவேட்டில் பதிவு செய்வது மட்டுமே ஆன்மாவின் பணி.உடல் இயக்கம் நின்றவுடன் ஆன்மாவும் அகன்றுவிடும். ஆன்மாவின் வடிவம் ய .

Tuesday, 29 April 2014
மரபணு
பல மிருகங்களின் மரபணுக்களின் கலவைதான் மனிதனின் மரபணு.சிலரை கூர்ந்து கவனித்தால் மிருகங்களின் சாயல் நன்றாகவே தெரியும்
வினை
பாவமும் புண்ணியமும் தனித்தனி அல்ல.இரண்டுக்கும் பொதுவான பெயர் வினை.வினைகள் யாவும் பதிவு செய்யப்படுகின்றன.அவரவர் வினைகளை அவரவர்களோ அல்லது சந்ததியினரோ அறுவடை செய்யவேண்டும்
Sunday, 23 March 2014
பெண்ணாய் பெற
எங்க ஊரு மதுரை. நான் சிறுவனாக இருக்கும்போது தெருவில் குழாயடியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் பெண்மணிகள் யாராவது குடத்தை தூக்கி இடுப்பில்வைப்பதர்க்கு உதவ சொல்லுவார்கள். நான் அப்படி தூக்கி விட்டவுடன் அவர்கள் அடிக்கடி சொல்லுவது என்னவென்றால் "உன் பொண்டாட்டி வெறும் பெண்ணாய் பெற " என்று சொல்லுவார்கள். எனக்கு இரண்டு பெண்கள் ஒரு பையன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
Tuesday, 11 March 2014
திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்
Subscribe to:
Posts (Atom)